சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. நவ. 12,13ம் தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை(09-11-2024) செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவில் 47-வது அதிபர் தேர்தலானது நிறைவடைந்து, 2-வது முறையாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வாகி இருக்கிறார். இதனால், உலக நாட்டு தலைவர்கள் ட்ரம்பிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பாகப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ், டிரம்பைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அதிபரான ஜோ பைடன், வெற்றி பெற்ற டிரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவித்து மக்கள் முன் உரையாற்றினார். மேலும், இந்த தோல்வியைக் […]
அமெரிக்கா : ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் நேற்று உரையாற்றிய பாரக் ஒபாமா, கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் ஆதரவாகவும் பேசியுள்ளார். ஜனநாயக கட்சியின் மாநாடு ..! இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர்-5ம் தேதி அமெரிக்கா அதிபர் தேர்தலானது நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் இரு கட்சியினரும் முனைப்பாக இருந்து வரும் நிலையில், நேற்று ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடானது சிகாகோ நகரத்தில் நடைபெற்றது. இந்த மாநாடானது கடந்த ஆகஸ்ட்-19 ம் தேதி தொடங்கி, வரும் ஆகஸ்ட்-22ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. […]
போலந்தில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல், ரஷ்யா அனுப்பியிருக்க வாய்ப்பில்லை என்கிறார் ஜோ பைடன். ரஷ்யா தனது ஏவுகணைகள் போலந்து எல்லையைத் தாக்கியதை மறுத்துள்ளது, போலந்து ஊடகங்கள் மற்றும் அதிகாரிகளின் அறிக்கைகள்… நிலைமையை வேண்டுமென்றே எங்கள் பக்கம் திருப்ப முயற்சிக்கின்றனர் என்று கூறியுள்ளது. போலந்தின் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இந்தோனேசியாவின் பாலியில், உலகத் தலைவர்களின் அவசரக் கூட்டத்தில் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் கலந்துகொண்டனர். […]