இந்தியை அலுவல் மொழியாக அறிவித்ததை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை திமுகவினர் முற்றுகை. புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு அலுவல் மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் அலுவல் மொழியாக இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் […]
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தனுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். ஜிப்மர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அரசு மருத்துவமனைகளில் ஒன்றாகும். மருத்துவமனை இணை இயக்குனர் ஜிப்மர் வழங்கிய தகவல்களின்படி, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 250 படுக்கைகள் கொண்ட ஒரு வார்டு சிறப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகளுக்கு ஜிப்மர் மருத்துவமனை சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது புதுச்சேரியிலிருந்துகொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. […]
ஜிப்மர் மருத்துவமனையில் நாளை முதல் இயங்கவுள்ள வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு. கொரோனா வைரஸின் தீவிர பரவல் காரணமாக, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின், வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டிருந்தது. தற்போது வைரஸ் தொற்று குறைந்துள்ள காரணத்தால், நாளை முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவு திறக்கப்படவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடலூரை சேர்ந்த மூவருடன் […]