நைஜீரியா : ஜிகாவா மாநிலத்தில் உள்ள மஜியா நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருளுடன் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 147 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. டவுராவின் உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள கானோ-ஹடேஜியா விரைவுச் சாலையில் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள அகாயி பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கையில், எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் சட்டென திருப்பிபோது டேங்கர் கவிழ்ந்துள்ளது. அப்போது, டேங்கர் லாரியில் இருந்த கசிந்த […]