ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த நவ-14ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கடந்த 20-ம் தேதியும் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதியது. நடைபெற்ற இந்த தேர்தலில் 67.74% சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. ஜார்காண்டில் வெற்றி பெரும்பான்மைக்குத் தேவையானது 41 […]
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் இரண்டு இடங்களில் பதிவான தபால் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, கேரளாவின் வயநாடு, பாலக்காடு சட்டசபை தொகுதியிலும், கர்நாடகாவின் சென்னபட்டணா சட்டசபை தொகுதியிலும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
சென்னை : தமிழகத்தில், தென் மாவட்டங்களில் கனமழையின் காரணத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், தென்காசி, கன்னியாகுமாரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவும், ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் 7 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.