எதிரிகள் ஒருபக்கம் என்றால், துரோகிகள் மறுபக்கம். சதி வலைகளை அறுத்தெறிவோம் ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், கருப்பு நிற உடை அணிந்து வந்து ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர். கட்சியினர் மட்டுமன்றி பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தலைமையில், அதிமுகவினர் உறுதி […]