ஜெயலலிதாவுக்கு தான் சிகிச்சை வழங்கவில்லை என ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.ஜெ., மரணம் குறித்த விசாரணையில் மருத்துவர் ஸ்வாமிநாதன் இன்று நேரில் ஆஜராகியிருந்தார். இதனையடுத்து, சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள ஆணைய அலுவலகத்தில், சுவாமிநாதன் ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு மாரடைப்புக்கான சிகிச்சை வழங்கப்பட்ட போது தான் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தது உண்மை தான் என்றும் எனினும், தான் ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது
ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன். பூங்குன்றன் வரும் 9 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விசாரணை ஆணையம் உத்தரவு. அப்பலோவில் ஜெயலலிதாவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம்தொடர் விசாரணை.விசாரணையில் சிகிச்சை முறைகள், பயன்படுத்தப்பட்ட மருந்துகள் குறித்து கேட்டறிவதாக தகவல். நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது .எனவே பூங்குன்றன் வரும் 9ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது . மேலும் ஜெயலலிதாவுக்கு […]
ஜெயலலிதா சிகிச்சை பெரும் வீடியோவினை வெற்றிவேல் அண்மையில் வெளியிட்டதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் முன்ஜாமின் கோரி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “தேர்தல் நோக்கத்திற்காக வீடியோவை வெளியிடவில்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, பல்வேறு தரப்பினரால் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதாலேயே அந்த விடீயோவினை வெளியிட்டேன்” என்று கூறியுள்ளார். மேலும், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தாம் வீடியோவை வெளியிடவில்லை என்றும், தமது செயல் தேர்தல் […]
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலா, அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, பிரீத்தா ரெட்டி உள்ளிட்டோருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ப்ரீத்தா ரெட்டி ஆகியோர் 10 நாட்களுக்குள் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென்றும், அதேபோல் 15 நாளில் பதிலளிக்குமாறு சசிகலாவுக்கும் கால அவகாசம் கொடுத்து சம்மன் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார். அதனையடுத்து அந்த விடியோவை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஒளிபரப்ப கூடாது என்று கூறியதால், அந்த வீடியோவின் ஒளிபரப்பு சமூக வலைத்தளங்களில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், தேர்தல் நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன் தேர்தலை மையப்படுத்தி எவ்வித பரப்புரையும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். வீடியோ ஒளிபரப்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு126(1)(பி)ஐ மீறுவதாகும். […]
ஆர்.கே. நகர் தேர்தலையொட்டி உள்நோக்கத்துடன் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டுள்ளனர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது தேர்தல் விதி மீறல் வெற்றிவேல் மீது சட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் .பாதுகாப்பு விதியை மீறி ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை எடுத்தது யார்? வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை- அமைச்சர் ஜெயக்குமார். source: dinassuvadu.com