முதலில் சீனாவில் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோய் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், சில வதந்தியான செய்திகளும் பரவி வருகிறது. இதுகுறித்து கூறிய அமைச்சர் ஜெயக்குமார், கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் தேவையற்ற தகவல்களை நம்ப வேண்டாம். தேவையின்றி பேருந்துகள், ரயில்கள், விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார். மேலும், காய்ச்சல், இருமல், உடல்சோர்வு இருந்தால் உடனே மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.