அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அரசியலில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து சூழ்நிலையில், அவருக்கு ஆதரவாக இருக்கும் ஜெயா தொலைக்காட்சியும் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சசிகலா சிறைக்கு சென்ற பின் டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சி தொடங்கி நடத்தி வந்தார். இதனால், அவருக்கு ஆதரவாக இருந்து வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியும் பறிபோனது.இந்நிலையில், கடந்த ஆண்டு இரட்டை இலை அதிமுக விற்கே என்று வெளியான தீர்ப்பிலிருந்து அமமுக கட்சிக்கு தொடர்ந்து சறுக்கல் ஏற்படத் தொடங்கியது. […]