திருவள்ளூர் மாவட்ட கொண்டமாபுரம் தெரு சாந்தி ஜுவல்லர்ஸ் கடையின் முன்பக்கமாக உள்ள இரும்பு கதவின் பூட்டுக்கள் வெல்டிங் மெசின் கொண்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் கடை உள்ளே சென்ற போது 35 சவரன் தங்க நகைகள், ஐந்து லட்சம் ரூபாய் பணம், ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான 80 வைரக்கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததையடுத்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.