தமிழ்த்திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரீமேக் படம் மூலமாக இந்தி படத்திற்கு இசையமைக்கவுள்ளார். தமிழ்த்திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இசையமைப்பாளர் அனிருத். இந்த படத்தின் மூலமாக கோலிவுட்டில் பிரபலமானார். தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணியில் இருக்கிறார். அதேபோல் தமிழில் தற்போது இந்தியன் 2, டாக்டர், டான், காத்துவாங்குல ரெண்டு காதல், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். […]