சர்வதேச வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் இருந்து 7-ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அறிவிப்பதை நம்புகிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிவித்தார். அவர் ஓய்வு பெரும் செய்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. எல்லா நேரத்திலும் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும், இந்தியாவுக்காக விளையாடிய மிகச் […]