பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 3 நாள் சுற்றுப்பயணமாக 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்த வகையில் ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த மூன்று நாள் பயணத்தின்போது பிரதமர் கிட்டத்தட்ட 25 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று ஜெர்மன் நாட்டின் தலைநகராகிய பெர்லினை சென்றடைந்துள்ளார். அங்கு பிரதமரை சிறப்பாக வரவேற்றுள்ளனர். மேலும் […]
டூத் பேஸ்ட் வாங்க சென்ற பயிற்சியாளர் மீண்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. முதலில் சீனாவில் பரவிய இந்த கொரோனா வாயிரஸ் தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாளிக்க துவங்கியுள்ளது. இதனால், ஒவ்வொரு நாட்டு அரசும் இந்த வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இதுவரை இந்த வைரஸால், 4,628,549 பேர் பாதிக்கப்ட்டுள்ள நிலையில், 308,645 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், […]
சீஸ் கடையிலிருந்து வந்த துர்நாற்றத்தால் பெண்மணி நீதிமன்றத்தில் வழக்கு. தொல்லை தாங்காமல் கடையையே காலி செய்ய முடிவெடுத்த கடைக்காரர். தெற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு சீஸ் கடைக்கு மேல் உள்ள மாடி வீட்டில் குடியிருக்கும் பெண் தான் மனுவலா. இவர் இந்த சீஸ் கடைக்கு மேல் இருப்பதால், தனது வீட்டிற்குள் கெட்ட வாடையாக வருகிறது கூறியுள்ளார். ஆனால், அந்த சீஸ் கடை உரிமையாளர் அந்த வடை தனது கடையிலிருந்து வரவில்லை எனவும், அது பக்கத்து தெருவிலிருந்து வருகிறது எனவும் […]
ஜெர்மனி நாட்டில், துக்க நிகழ்வுகளின் போது, இறந்தவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின், அதில் பங்கேற்க வந்தவர்களுக்கு ஓட்டலில் ‘கேக்’கும், காபியும் பரிமாறுகிற கலாசாரம் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், வீதாகென் என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில், ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக் மற்றும் காபி பரிமாறப்பட்டது. இதனை சாப்பிட்ட 13 பேருக்கு குமட்டலும், தலை சுற்றலும் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக அண்மையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து போலீசாரிடம் […]
இன்று பல நாடுகளில் வித்தியாசமான முறையில் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜெர்மனியில் ஒரு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்கள் பீர் அருந்திக் கொண்டே ஓட வேண்டும். ஜெர்மனியின், பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த வினோதமான ஓட்டப்பந்தயத்தில், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் பயன்படுத்திய பீரில், 5 சதவீதம் மட்டுமே மது கலந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வினோதமான ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் இந்த போட்டி […]
சுகாதாரத்துறை அதிகாரிகள் தென்மேற்கு ஜெர்மனியின் bad schornborn என்ற பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது, ஒரே பள்ளியை சேர்ந்த 109 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில் இரண்டு மாணவர்களுக்கு, மற்றவர்களை பாதிக்கும் அளவில் மோசமான காசநோய் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த மாணவர்கள் பள்ளியில் இருந்து அகற்றப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் பயிலும் 56 மாணவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த […]