ஆந்திராவில் 250க்கும் மேற்பட்டவர்களை மர்ம நோய் தாக்கிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆந்திர முதல்வர். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள, எலுரு என்ற நகரில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்டோர் ஒரு மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், வலிப்பு மற்றும் கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, இவர்கள் அனைவரும் எலுரு பகுதியில் உள்ள அரசு பொது […]
ஆந்திராவில், 2.68 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக அனைத்து மாநிலங்களிலும், அரசு வேலையில் உள்ளவர்கள் மற்றும் உயர்ந்த பதவியில் உள்ளவர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க விரும்புவதில்லை. இவர்கள் அதிகமாகி தனியார் பள்ளிகளின் தான் தங்களது குழந்தைகளை சேர்ப்பதுண்டு. இந்நிலையில், ஆந்திராவில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கல்வி சீர்திருத்தங்கள் மிகவும் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக 2.68 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய […]
ஆந்திராவில் பள்ளிகள் நவம்பர் 2ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் பல மாநிலங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ள நிலையில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் நவம்பர் 2 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாநிலத்தில் நிலவும் கொரோனா நிலைமை குறித்து ஆந்திர முதல்வர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் ஆகியோருடன் காணொளி காட்சிமூலம் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கூறுகையில், “அக்டோபர் […]