டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் ஓர் புயலை கிளப்பினார். இந்த விவகாரம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படியான சூழலில், திருப்பதி லட்டு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திரா மாநில அரசு மீது […]
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய ஆந்திர மாநில ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டன. குறிப்பாக , லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மீன் எண்ணெய், மாட்டு இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கொழுப்புகள் ஆகியவை இருந்ததாக கூறப்பட்டன. பக்தர்களுக்கு கோயில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக கூறப்படும் குற்றசாட்டுகள் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சியினரும் […]
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்து இருப்பதாக வெளியான தகவல்கள் நாடு முழுவதுடன் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதியில் தயாரிக்கப்பட்ட லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு ஜெகன் மோகன் ரெட்டி கட்சி தரப்பு […]
டெல்லி: ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக முடிவடைந்தது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 5,39,189 தபால் வாக்குகள் ஆந்திர மாநிலத்தில் பதிவாகியது. இந்த பதிவான தபால் வாக்குகளில், படிவம் 13ஏ-வில், கையெழுத்திடும் அதிகாரி, அவர் கையொப்பம் மட்டுமல்லாது, பதவி மற்றும் முத்திரை இருக்க வேண்டும். ஆனால், அந்த விதிமுறையை தளர்த்தி ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு […]
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற குரல்கள் அதிகமாக ஒலிக்க ஆரம்பித்து விட்டன. ஏற்கனவே பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவை அந்நாட்டு மாநில சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டும் விட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல்… வாக்காளர்களுக்கு துரோகம்.! காங்கிரஸ் கடும் எதிர்ப்பு.! அதேபோல, மற்ற மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அந்தந்த மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று முதல் […]
வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று சேத பாதிப்பை பார்வையிட்டார். வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது தீவிரமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடாக்கு அருகே ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் பலத்த […]
ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் ஆந்திராவில் 36,221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 365 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 16,464 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடுதிரும்பியுள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அந்த […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தானமாக பெறப்பட்ட நிலங்களை விற்கும் முடிவை பரிசீலனை செய்யுமாறு ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலிலுக்கு பக்தர்கள் தானமாக நிலங்களை கொடுப்பது வழக்கம். அப்படி பெறப்பட்ட நிலங்களை விற்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இந்த முடிவை பரிசீலனை செய்யும் படியும், அதுவரையில் நிலம் விற்கும் முடிவை கைவிடும்படியும் ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத குருக்கள், பக்தர்கள், ஆன்மீகவாதிகளின் அறிவுறுத்தலை பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்த்ர்கள் தானம் செய்த நிலத்தில் […]
விஷவாயு தாக்கி ஆந்திராவில் 8 பேர் பலியான விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய பேரிடர் மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தில் இயங்கி வரும் எல்.ஜி பாலிமர் இண்டஸ்டிரியில் இருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு விஷவாயு ஒன்று வெளியானது. இதனால் அந்த தொழிற்சாலையை சுற்றி இருந்த ஊர்மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பிரச்சனை எழுந்தது. இதன் காரணமாக இதுவரை ஒரு குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக […]
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் ஊரடங்கிற்கு கட்டுப்பட்டு வீட்டில் இருக்கும் போது, பொதுமக்களின் நலனுக்காக இரவு பகல் பார்க்காமல் கொரோனாவுடன் போராடி வருகின்றனர் நமது மருத்துவர்கள். அதேபோல கொரோனா பொதுமக்களிடம் பரவாமல் காவல்துறையினரும் அயராது உழைத்து வருகின்றனர். இதனை கௌரவிக்கும் வகையில் ஆந்திர மாநிலத்தில் காவல்துறையினரின் காலில் விழுந்து ஒருவர் வாங்கியுள்ளார். ஆந்திர மாநிலத்தை ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ செட்டி பால்குனா ஆந்திர […]
ஆந்திரா சட்ட பேரவையில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணையை 3 வாரத்தில் முடித்து குற்றவாளிக்கு தண்டனை அளிக்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதி. இந்தியாவில் பல்வேறு பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. அதில் சமீபத்தில் தெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவர் ப்ரியங்கா ரெட்டியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் போலீஸ் விசாரணையின் போது தப்பிக்க […]
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து, முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவித்து வருகிறார். மதுபான கடைகள் குறைப்பு, மதுபான பார் லைசென்ஸ் கட்டணம் கடுமையாக உயர்வு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அடுத்த அதிரடியாக ஆந்திர மாநிலத்தை லஞ்சம் இல்லாத மாநிலமாக உருவாக்க தற்போது புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளார். அதில் […]
அண்மையில் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனால் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதே போல சந்திர பாபு நாயுடு மகனுக்கு மாவோயிஸ்ட் மிரட்டல், செம்மரகடத்தல் கும்பல்களின் மிரட்டல் இருந்ததால் கொடுக்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஹைதிராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. […]