சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சாலையோர தடுப்பில் மோதி நடிகர் ஜீவா சென்ற கார் விபத்தில் சிக்கியது. ஜீவா மற்றும் அவரது மனைவியுடன் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு திரும்பியபோது சின்னசேலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயம், இருசக்கர வாகனம் ஒன்று வேகமாக குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பைக் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக ஜீவா காரை திருப்பியுள்ளார். அப்போது, சாலையோர தடுப்பு கட்டையில் மோதி அவருடைய கார் விபத்தில் […]