IITMadras : JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் -ல் இலவசமாக BS பட்டப்படிப்பு படிக்க ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், அதற்கு ஐஐடி மெட்ராஸ் நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டி நிகழ்ச்சி நாளை (மே 12) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிலையில், இதில் விருப்பமுள்ள 11, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் பெற்றோருடன் நாளை கலந்துகொள்ளலாம். இதற்கான அனுமதியும் […]
ஒரு மாணவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகுதான் பொறியாளர் அல்லது மருத்துவராக ஆவதற்கு நடத்தப்படும் JEE மற்றும் NEET தேர்வில் கலந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், எதிர்காலத்தில் டாக்டராகவோ, இன்ஜினியராகவோ ஆக வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்குகிறார்கள். இதன் காரணமாக பெற்றோர்கள் பெரிய நகரங்களில் இயங்கி வரும் JEE மற்றும் NEET பயிற்சி மையங்களில் சிறு வயதிலிருந்தே மாணவர்களை சேர்த்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் மன […]
தற்போது வடகிழக்கு பருவமழை மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கும் அவ்வப்போது விடுமுறை அளிக்கும் சூழ்நிலைகளும் உருவாகிறது. இம்மாதிரியாக விடப்படும் அவசரகால பள்ளி விடுமுறைகளை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வேலைநாட்களாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். மாணவர்களின் P.E.T […]
ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பதற்றமடையாமல் தேர்வுக்கு தங்களை தயார் செய்யலாம் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.இ.இ. தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விடுத்த கோரிக்கை பற்றி விரைவில் தீர்வு காணப்படும் என தேசிய தேர்வு முகமை உறுதியளித்துள்ளது. எனவே, ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பதற்றமடையாமல் தேர்வுக்கு தங்களை தயார் செய்யலாம் என […]
ஜேஇஇ நுழைவு தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு உள்ள சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாமல் தேர்ச்சி எனும் சான்று வாங்கிய மாணவர்கள் தற்போது 12ஆம் வகுப்பு முடித்து ஐஐடி கல்லூரியில் சேருவதற்கு எழுதும் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை எழுந்துள்ளது. ஏனென்றால், தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜேஇஇ நுழைவு தேர்வு எழுத 10ஆம் வகுப்பு […]
ஜேஇஇ தேர்வு விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மார்க் குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. ஜேஇஇ தேர்வு விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மார்க் குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மார்க் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு ஆண்டுக்கு முன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு மார்க் வழங்கப்படாததையும் சுட்டிக்காட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதமாக வந்ததால் கல்லூரிகளை மாற்றிய மாணவர்களுக்கு அவர்கள் முதலில் சேர்ந்த கல்லூரிகளில் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை அந்ததந்த கல்லூரிகள் திருப்பி தரவேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இந்த வருடம் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியிட பட்டதாலும், நீட், ஜே.இ.இ தேர்வு முடிவுகள் காரணமாக பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் முன்கூட்டியே சேர்ந்துவிட்டனர். பின்னர் முடிவுகள் தெரிந்த பின்னர் அவர்கள் தங்கள் படிப்புகளை மாற்றும் நிலை வந்தது. இதனால், கல்லூரியில் இடைநின்ற மாணவர்களுக்கு அவர்கள் […]
JEE முதன்மை முடிவு 2021-க்கான முடிவுகள் இன்று வெளியீடு. JEE மெயின் 2021 முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட JEE மேம்பட்ட 2021 க்கான பதிவு தேதி ஒத்திவைக்கப்பட்டது. கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) அமர்வு-4, தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை (NTA) இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. JEE மேம்பட்ட 2021 பதிவு திங்களன்று (செப்டம்பர் 13, 2021) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் தகுதி […]
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் கணக்கில் ஜெ.இ.இ. மேம்பட்ட 2021 அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார். ஐ.ஐ.டி-களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு – ஜே.இ.இ மேம்பட்ட தேர்வு 2021 அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்வீட் செய்துள்ளார்.ஜே.இ.இ மெயினில் முதல் 2.5 லட்சத்தில் இடம் பெறுபவர்கள் மட்டும் ஐ.ஐ.டி.களுக்கு தேர்வு செய்ய தகுதியுடையவர்கள். JEE மேம்பட்ட தேர்வு 2021 […]
2021 மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ) முதன்மை 2021 அமர்வின் முடிவை தேசிய சோதனை நிறுவனம் (என்.டி.ஏ) திங்களன்று அறிவித்தது.JEE முதன்மை மார்ச் அமர்வில் தேர்வு எழுதியவர்கள் முடிவுகளை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். தேசிய சோதனை நிறுவனம் JEE Main 2021 மார்ச் முடிவை அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeemain.nta.nic.in இல் அறிவித்துள்ளது.முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பு நிறுவனம் இறுதி பதில் விசைகளை(final answer keys ) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. JEE முதன்மை […]
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தலைமையில் நடைபெற்ற என்.சி.இ.ஆர்.டி.யின் 57 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநிலக் கல்வித் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில், டெல்லி துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா கலந்துகொண்டார். அப்போது, கொரோனா தொற்றுநோய் காரணமாக, மாணவர்கள் பள்ளி நாட்களை தொடர்ந்து இழப்பதால் அனைத்து வகுப்பினருக்கான பாடத்திட்டங்கள் 50 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டு, நுழைவுத் தேர்வுகள் ‘நீட்’ மற்றும் ‘ஜே.இ.இ’ போன்றவை குறைக்கப்பட்ட […]
நீட், ஜே.இ.இ நுழைவு தேர்வுகளை தாமதப்படுத்துவது மாணவர்களின் கல்வி திறனை பாதிக்கும் என டெல்லி ஐஐடி இயக்குனர் கூறியதற்கு பாஜக எம்பி சுப்பிரமணியம் சுவாமி ட்வீட் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். மருத்துவ நுழைவு தேர்வான நீட் மற்றும் ஐஐடி பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான ஜே.இ.இ ஆகிய தேர்வுகளை தாமதப்படுத்துவதால் மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்படும். எனவே அவற்றை குறிப்பிட்ட தேதியில் நடத்தவேண்டும் என டெல்லி, ஐஐடி இயக்குனர் தெரிவித்திருந்தார். இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவருக்கும் மாநிலங்களவை […]
வெளிநாட்டிலுள்ள ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத வாய்ப்பளித்தது,போல நீட் தேர்வு எழுத வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ் ஊரடங்கால் பல மாணவர்கள் தங்களது படிப்புகளை விட்டு விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில், அடுத்தமாதம் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெறவுள்ளது. தற்பொழுது ஜேஇஇ தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய கிழக்காசிய நாடுகளில் வசிக்கக்கூடிய நான்காயிரம் இந்திய மாணவர்களுக்கு […]
செப்டம்பர் 13 ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரைஜே.இ.இ மெயின் தேர்வும், செப்டம்பர் 27 ஆம் தேதி ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என பல இந்த தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி […]
இந்த வருடத்தில் நடக்கவிருந்த NEET மற்றும் JEE தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் தான் உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ ஆகிய தேர்வுகள் இந்த வருடம் ஒத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரிய மனுவை […]
நீட் ,ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்க்கோரி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதன் பின் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் […]
விதிகளில் திருத்தம் கொண்டு வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் ஸ்தம்பித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, தேசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பயில 12-ம் வகுப்பு பொது தேர்வில் […]
மருத்துவம் மற்றும் இஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களுக்கான Neet மற்றும் Jee நுழைவு தேர்வுக்கான புதிய தேதி இன்று (மே 5) அறிவிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாஸ் கூறியுள்ளார். இவர் இணையத்தில் நேர்காணல் மூலம் மாணவர்களிடம் உரையாட போவதாகவும் கூறியுள்ளார்.
நீட் மற்றும் JEE Main தேர்வுகள் ஜூனில் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். நீட், JEE Main தேர்வுகள் மே இறுதியில் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளதால், தற்போது தேர்வுகள் ஜூனில் நடைபெறும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். அதுவும் ஊரடங்கு முடிந்தே அதற்கான முடிவும், அட்டவணையும் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் […]