இடைத்தேர்தல் முடிவுகள் : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைதேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், வெறும் இரண்டே இடங்களில் மட்டும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. அதன்படி, மத்தியபிரதேச மாநிலம் அமர்வாரா தொகுதி இடைத்தேர்தலில் 3,027 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மேலும், இமாச்சல்பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் தொகுதியிலும் பாஜக வெற்றி […]
இடைத்தேர்தல் முடிவுகள்: நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்தின் விக்கிரவாண்டி உள்ளிட்ட 13இல் 11 தொகுதிகளில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர், பாஜக தலைமையிலான NDA கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 2 தொகுதிகளில் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளன. பஞ்சாபில் காங்கிரஸ், ஆம் ஆத்மி நேரடியாக மோதிய […]
டெல்லி: மக்களவை சபாநாயகர் யார் என்பது குறித்த ஆலோசனையை பாஜக, NDA கூட்டணி கட்சிகளுடன் வரும் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதம மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற முக்கிய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், இன்னும், மக்களவை சபாநாயகர் யார் என்று அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் […]
டெல்லி: உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை போன்ற முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக்கொள்ள பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. பிரதமர் மோடி நாளை மாலை 7 மணி அளவில் இந்தியவின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், நாளை முக்கிய துறைகளுக்கான அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இப்படியான சூழலில், NDA கூட்டணியில் முக்கிய கட்சிகளாக இருக்கும் […]
டெல்லி: மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியநிலையாக, இன்று டெல்லியில் NDA கூட்டணி எம்பிக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியின் பெயரை நாடாளுமன்ற குழுத்தலைவர் (பிரதமர்) என்று ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். இதனை […]
டெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணி அதிக இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பாஜக தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு கூட்டணியை உறுதிப்படுத்தினார். இதனை அடுத்து, இன்று NDA கூட்டணியில் உள்ள எம்.பிக்கள், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம், இன்று டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற […]
டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் இந்தியாவில் பல்வேறு பரபரப்பான அரசியல் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 2014 , 2019 என கடந்த இரண்டு முறையும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது போல பாஜகவால், இந்த முறை தனிப்பெரும்பான்மை வெற்றியை பெற முடியவில்லை. அதனால், கூட்டணி ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. பாஜகவின் NDA கூட்டணியில், மிக முக்கிய அங்கமாக இருக்கும் கட்சிகள், சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் (16 எம்பிக்கள்) , நிதிஷ்குமாரின் ஐக்கிய […]
டெல்லி: 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல் போல அல்லாமல், இந்த முறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க போதிய இடங்கள் இல்லாத காரணத்தால் கூட்டணியை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் தனிப்பெரும்பான்மை ஆட்சி என்பதால் மற்ற கட்சிகளின் கருத்துக்களை கலந்தாலோசிக்காமல் ஆளும் பாஜக தங்கள் செயல்திட்டங்களை செயல்படுத்தி வந்தது. ஆனால் இனி கூட்டணி கட்சிகளிடம் ஆலோசிக்க வேண்டிய கட்டயத்தில் உள்ளது. இதனால் பாஜகவால் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த ஒரே நாடு ஒரே தேர்தல், சிஏஏ சட்டம் […]
டெல்லி: மக்களவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தற்போது மாநில கட்சிகளிடம் தேசிய கட்சிகள் ஆதரவு கேட்கும் சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக நிதிஷ் குமார் (JDU), சந்திரபாபு நாயுடு (TDP) ஆகியோரின் ஆதரவை NDA மற்றும் I.N.D.I.A கூட்டணிகள் பெற முயற்சித்து வருகின்றன. இதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த சூழல் தான் இன்று RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் (I.N.D.I.A கூட்டணி) மற்றும் JDU தலைவர் நிதிஷ்குமார் (NDA கூட்டணி) ஆகியோர் ஒன்றாக […]
நிதிஷ் குமார்: நேற்று வெளியான மக்களவை தேர்தல் முடிவுகள் நாட்டில் பல்வேறு பரபரப்பான அரசியல் களத்தை உருவாகியுள்ளன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருகின்றன. இன்று பாஜக தலைமையிலான NDA கூட்டணியும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் I.N.D.I.A கூட்டணியும் டெல்லியில் ஆலோசனை நடத்துகின்றனர். அதில் கலந்து கொள்ள பிரதான கட்சிகள் டெல்லிக்கு விரைந்துள்ளன. முன்னதாக, டெல்லி செல்வதற்கு முன்னர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, […]
NDA கூட்டணி: நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. பாஜக 240 தொகுதிகளையும், காங்கிரஸ் 99 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இதில் பாஜகவுக்கு கடந்த தேர்தல்கள் போல பெரும்பான்மை வெற்றி கிடைக்கவில்லை. அதனால், பாஜக தலைமையின் கீழ் உள்ள NDA கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. முக்கியமாக, 16 இடங்களை வென்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 இடங்களை பெற்றுள்ள ஐக்கிய […]
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தற்போது வெளிநாடு தப்பி சென்றுள்ள மஜத எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க கர்நாடகாவின் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை விடியோவாக எடுத்து வைத்ததாக அவர் மீது குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில் பிரஜ்வல் […]
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இளம் பிரமுகர் சவுரப் குமார் என்பவர் நேற்று இரவு பாட்னா பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று பர்சா பஜார் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் சவுரப் கலந்துகொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சவுரபை சரமாரியாக சுட்டனர். இதில் சவுரபின் தலை மற்றும் கழுத்து […]
பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் ( ஜேடியு) தலைவர் நிதிஷ் குமார் தற்போது தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் கொடுத்துள்ளார். இன்று காலை ஜேடியு எம்எல்ஏக்களுடன் நிதிஷ் குமார், ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஆட்சியை கலைக்க கோரி ஆளுநரிடம் கூறியுள்ளேன். பலபேரிடம் இந்த ஆலோசனை கேட்ட பிறகே இந்த முடிவை […]
பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம்( ஜேடியு) தலைவர் நிதிஷ் குமாரும் மீண்டும் கட்சி மாறுவது குறித்து பீகாரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதல்வர் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உடன் கூட்டணியை முறித்து கொண்டு இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு ஜேடியு எம்எல்ஏக்களுடன் நிதிஷ் குமார் சந்திப்பு நடத்தலாம் என்று இதைத் தொடர்ந்து அவர் ராஜ்பவனுக்குச் […]
இந்தியா கூட்டணியில் உள்ள ஜேடியு தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் வரும் ஞாயிற்றுக்கிழமை பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக பதவியேற்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகிறது. பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும், 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலையும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். அதன்படி, 2020-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக, நிதிஷ்குமாரின் ஜேடியூ இணைந்து போட்டியிட்டன. பீகாரில் […]
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தார். பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிவு என முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தார். இன்று மாலை ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில், கூட்டணி முறிவு என அறிவித்திருந்தார். இன்று மாலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அளிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் நிதிஷ் குமார். பீகார் ஆளுநர் […]
பீகாரில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது ஐக்கிய ஜனதா தளம் கட்சி. பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிவு என முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில், கூட்டணி முறிவு என அறிவித்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் கட்சியுடன் சேர்ந்து பீகாரில் மீண்டும் […]
பீகார் ஆளுநர் பகு சௌஹானை சந்திக்க ஐக்கிய ஜனதா தளம் சார்பில் நேரம் கேட்டிருப்பதாக தகவல். பாஜகவுடன் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் நாளை அவரச ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு எம்பி, எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜகவில் இருந்து வெளியேறி ஆர்.ஜே.டியுடன் சேர்ந்து ஆட்சியில் தொடர நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று ஆலோசனை நடைபெற்றது. பாஜக தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பீகாரில் […]
பீகாரைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., மகேந்திர பிரசாத் டெல்லியில் உடல்நலக்குறைவால் காலமானார். பீகார் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்பி மகேந்திர பிரசாத் (81 வயது) நீண்ட நாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். எம்பி மகேந்திர பிரசாத் 1985 முதல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர். முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் அதன் பிறகு ஜனதா தளத்தில் இணைந்தார். பின்னர், லலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து […]