ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு, நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமேசான் ஒடிடியில் வெளியானது.இப்படம் பொதுமக்கள்,தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிற அரசியல் தலைவர்களிடம் வரவேற்பை பெற்றது. எனினும்,இப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாகவும், குற்றவாளி கதாபாத்திரத்தின் […]
தமிழகம்:சாதி-மத சீரழிவுப் போக்குகளைச் சில அரசியல் சக்திகள் ஊக்குவித்து வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக இருந்ததாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற திரைக் கலைஞர் ஒருவர் தனக்குள்ள புகழையும் செல்வாக்கையும் எவ்வாறு எளிய மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு நடிகர் சூர்யா ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்குவது போற்றுதலுக்குரியது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது” ‘கலைநாயகன்’ சூர்யா: […]