விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ. கடந்த மே 10-ஆம் தேதி ஜெயபால் வீட்டுக்குள் நுழைந்த முருகன் மற்றும் கலியபெருமாள், வீட்டில் தனியாக இருந்த சிறுமி ஜெயஸ்ரீயின் கை, கால்களை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஜெயஸ்ரீ தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி ஜெயஸ்ரீ கொடுத்த வாக்கு-மூலம் மூலம் போலீஸார் […]
உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். விழுப்புரம் அருகே சிறுமதுரை என்ற ஊரில் ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீயை அதிமுக உறுப்பினர்கள் கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகியோர் தீவைத்து கொளுத்தினர். பலத்த காயங்களுடன் ஜெயஸ்ரீ முண்டியப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அதிமுக உறுப்பினர்கள் கலியபெருமாள் மற்றும் […]