சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை வருகிறது.விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதன்படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.ஏற்கனவே 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, […]
சாத்தான்குளம் பெனிக்ஸ் ஜெயராஜ் வழக்கில் மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு 14 நாட்களுக்கு சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் காவல்துறையினர் லாக்கப்பில் வைத்து தாக்கியதில் உயிரிழந்த தந்தை மகன் விவகாரம் பெரிய அளவில் உருவெடுத்து தற்பொழுது உச்சநீதிமன்றத்தால் அந்த காவலர்கள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர் கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர் ஏற்கனவே கைது […]
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன்களான ஜெயராஜூம், பென்னிக்ஸும் சிறையில் உயிரிழந்தனர். இந்த சிறை மரணம் விசாரணைக்கு பின்னர், கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை மகன் சிறையில் சித்தரவதை செய்யப்பட்டு இருவரும் கொலைசெய்யப்பட்டதாக சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் தலைமை […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற லாக்கப் இரட்டைப் படுகொலையை மையமாக வைத்து அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது அவசியம் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் இந்தியாவையே உலுக்கும் அளவிற்கு பெரிய போராட்டமாக வெடித்த சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோரின் சித்திரவதை கொலைகள் இந்தியா முழுவதையுமே மிகவும் உலுக்கியது. இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தூண்டுதல் காரணமாக சமூக வலைதளங்களில் பெரும் புரட்சியாக […]
பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் உயிரிழப்பிற்கு காரணமான காவலர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து சாத்தான்குளத்தில் பென்னிக்ஸின் நண்பர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் மொபைல் கடை வைத்து நடத்தி வந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரையும் போலீசார் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கடையை திறந்து வைத்திருப்பதாக கைது செய்து அழைத்துச் சென்று சிறையில் வைத்து சித்திரவதை படுத்தி கொலை செய்துள்ளனர். இந்த இரட்டை கொலைக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு வெடித்தது. […]
கோவில்பட்டி கிளைசிறையில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கில் “இனி ஒரு நொடியும் வீணாகக் கூடாது” என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி, தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையானது, நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ […]
நெல்லை டிஐஜி அல்லது சிபிசிஐடி விசாரிக்க இயலுமா? என்று பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று தெரிவித்தார்.அதன்படி நீதிமன்றத்தில் […]
போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை கோவில்பட்டி மாவட்ட நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து வருகின்றனர். இந்த […]