உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக படுக்கையில் உள்ள இயக்குநர் விக்ரமனின் மனைவிக்கு தேவையான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குடும்பங்கள் கொண்டாடும் இயக்குனராக விக்ரமனுக்கு இல்லத்தரசிகளை திரையரங்கிற்கு வரவழைக்கும் பெருமை உண்டு. பல தரமான திரைப்படங்களை வழங்கிய இவர், கடந்த சில வருடங்களாக எந்த படத்தையும் இயக்கவில்லை. அது ஏனென்று பார்க்கையில், அதன் பின்னணியில் இருக்கும் சோகமான கதை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அவரது மனைவி கடந்த ஐந்து வருடங்களாக நடக்க முடியாமல் […]
நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமார் மகள் ஜெயப்பிரியாவை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தல். நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் குமார் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். முன்ஜாமீன் மனு குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள் ஜெயப்பிரியாவை கைது செய்யக்கூடாது என்றும் காவல்துறைக்கு அறிவுறுத்திய நிலையில், ஜெயக்குமார் மகள் ஜெயப்பிரியா, […]