திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஜெயலலிதாதான் நமக்கும் சேர்த்து முதலமைச்சர் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவெற்றியூரில் நடந்துவரும் மொழிப்போர் தியாகிகள் நினைவுதின பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உரையாற்றியபோது, கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களுக்கு, துயரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். இன்னும் நான்கு மாதத்தில் ஆட்சி மாற்றம் வரப்போகுது, அதில் எந்த மாற்றமும் இல்லை. உலகத்திலேயே இந்த கொரோனா தொற்றுக்கு மத்தியில் மக்களை நேரில் சந்தித்து உதவி செய்த […]
திமுக தேர்தல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை சேர்க்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை தேவராயபுரம் கிராமத்தில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், ஜெயலலிதா அவர்கள் 1.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரானவர். அவருடைய மரணத்தில் மர்மம் என்று ஓ.பி.எஸ் அவர்கள் அவரது நினைவிடத்திற்குச் சென்று 40 நிமிடம் தியானத்தில் அமர்ந்தார். ஆன்மாவோடு பேசினார். அவரது […]
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்கப்பட்டது. வழக்கு விசாரணை பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த […]