ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆர்.ஆர்.கோபால்ஜி என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக அரசு மற்றும் சிபிஐயிடம் மனு அளிக்காமல் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ரகசியமும், வெளிப்படை தன்மையும் பின்பற்றவில்லை […]
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம் என முதல்வர் பேச்சு. முன்னாள் அமைச்சர் பெங்களூரு பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் பல பிரச்சனைகள் உள்ளது. அதெல்லாம் இப்போது சொல்லமாட்டேன். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுப்போம். விசாரணை அறிக்கையை […]
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு கடிதம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. வரும் 24-ஆம் தேதியுடன் அவகாசம் முடியும் நிலையில், மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் அறிக்கையை தயார் செய்ய அவகாசம் இல்லை என்பதால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. […]
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவு பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி புகழேந்தி கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பு, அப்போலோ தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பிடமும் ஏற்கனவே ஆறுமுகசாமி ஆணையம் […]
கடவுளுக்கு தெரிந்த உண்மை நேற்று ஓபிஎஸ் மூலம் மக்களுக்கும் தெரிந்து விட்டது என சசிகலா பேட்டி. சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் நேற்று 2வது நாளாக விசாரணை நடத்தியது. அப்போது, ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை என்றும் சசிகலா மீது மரியாதை அபிமானம் வைத்திருப்பதாகவும் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்திருந்தார். ஓபிஎஸ் உண்மையை கூறியிருக்கிறார்: இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை […]
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை என ஓபிஎஸ் வாக்குமூலம். ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தில் ஓபிஎஸ் அளிக்கும் வாக்குமூலம் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்தவகையில், ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை என ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். சசிகலா சதித்திட்டம் திட்டவில்லை: 2011-12, அதற்குப்பின் சசிகலா, அவரின் […]
ஜெயலலிதா இறப்பதற்குமுன் நான் நேரில் பார்த்தேன் என்று இரண்டாவது நாள் விசாரணையின்போது ஓபிஎஸ் வாக்குமூலம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம், ஆறுமுகசாமி ஆணையம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. அப்போது, 2016 டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா இறப்பதற்குமுன் நான் உட்பட 3 அமைச்சர்கள் அவரை நேரில் பார்த்தேன் என்று ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். டிசம்பர் 4-ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு இதயம் செயலழிந்த பின் இதய துடிப்பை […]
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் நாளையும் விசாரணை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகியிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நாளையும் விசாரணை நடைபெற உள்ளது. இன்று விசாரணைக்கு ஆஜரான நிலையில், நாளையும் விசாரணைக்கு ஆஜராக ஓபிஎஸ்-க்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று காலை மற்றும் பிற்பகல் நடந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுவரை 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. உணவு இடைவெளிக்கு பிறகு ஆறுமுகசாமி […]
மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் திடீர் தகவலை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், இன்று முதல் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது. டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தொடுக்கப்பட்ட வழக்கு காரணமாக 3 ஆண்டுகளாக ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த சமயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்போரின் அடிப்படையில் […]