எங்கள் அம்மா அவர்களின் பெயரை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சூட்டியது, தமிழக மக்களின் நீண்ட நாள் ஏக்க பெருமூச்சு என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவி […]
புதிய கல்விக்கொள்கையை எதிர்க்காமல் – எம்ஜிஆர் அவர்கள் & ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்யத் துணிந்துவிட்டதா அதிமுக ? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும் கிஞ்சித்தும் மதிக்காமல் எதேச்சதிகாரத்தின் உச்சக்கட்டத்தில் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு, திட்டமிட்டு பல்வேறு உள்நோக்கங்களுடன் திணிக்கின்ற புதிய கல்விக் கொள்கை என்பது, மாநில உரிமைகளுக்கும் – சமூகநீதிக்கும் – இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் – எதிராக இருப்பதுடன், இந்திய […]
ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடைக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சமீபத்தில் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ஜெயலலிதா சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் தான் போயஸ் இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், தற்போது வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் […]
ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் தெரிவித்துள்ளார். வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவதை எதிர்த்து டிராபிக் ராமசாமி, தங்கவேலு ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த நிலையில் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் இருந்து விலகுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .மேலும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளார்.