வலுவிழந்த ஜாவத் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று நண்பகல் பூரிக்கு அருகே ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் மாலை புயலாக வலுப்பெற்றது. அதற்கு ஜாவத் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கி, இன்று காலை ஒடிசாவின் புரி அருகே கரையை கடக்கும் என இந்திய […]
வங்கக்கடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வங்ககடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வலுவிழந்த ஜாவத் புயல் விசாகப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 180 கிமீ தொலைவில் கோபால்பூருக்கு தெற்கே 260 கிமீ தொலைவில் (ஒடிசா , பூரியில் இருந்து 330 கிமீ தென்-தென்மேற்கில்) உள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி நாளை ஒடிசா கடற்கரையை நோக்கி […]
ஜாவத் புயல் இன்று காலை வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர மற்றும் தெற்கு ஒடிசா இடையே கடற்கரையை தொடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது,நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று,அதன்பின்னர் நண்பகலில் மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயலாக தீவிரமடைந்தது. இந்நிலையில்,ஜாவத் புயல் இன்று காலை வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர மற்றும் தெற்கு […]
மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜாவத் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர கடலோரம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரம் நோக்கி செல்லும், ஜாவத் புயல் நாளை ஆந்திர கடலோரத்தை அடையும்போது மணிக்கு 90 கி.மீ முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 5-ஆம் தேதி ஒடிசாவின் பூரி கடற்கரை அருகே ஜாவத் புயல் கரையை கடக்கும் என […]