கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 7 ஆயிரம் கைதிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. நாட்டின் பல மாநிலங்களில் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படுவதுடன், தொடர்ந்து உயிரிழந்து கொண்டும் தான் இருக்கின்றனர். குறிப்பாக சிறைகளில் உள்ள கைதிகள் இந்த கொரோனா தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். […]