இன்று 2024 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே ஜப்பானில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் 5.5 என்ற ரிக்டர் அளவு முதல் 7.6 ரிக்டர் அளவு வரை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானின் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுப்பு! இஷிகாவா, நைகட்டா, டொயாமா உள்ளிட்ட கடற்கரையோர நகர மக்கள் சுனாமி எச்சரிக்கை காரணமாக அங்கு வசித்து வந்த மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டனர். […]
சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம். சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாய்வில் தொடங்கியுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் சந்தேகப்படும் நபர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அந்ததந்த மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில், சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நாடுகளில் இருந்து […]
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து மலபார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டனர். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து குவாட் எனும் அமைப்பை உருவாகின. இந்த குவாட் அமைப்பானது ஒன்றிணைந்து கூட்டு போர் பயிற்சியை மேற்கொண்டன. ஜப்பான் கடற்படையில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து மலபார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டனர். இதில் இந்திய கடற்படையின் சார்பில் விமானம் தாங்கி கப்பல் உள்பட 11 கப்பல்கள், கடல்சார் ரோந்து விமானங்கள், […]
பல துப்பாக்கிகளை சோதனை முயற்சியாக தயார் செய்து, பல தோட்டாக்கள் கொண்டு சுட்டு பயிற்சி எடுத்து தான், ஷின்சோ அபேவை கொலைகாரன் சுட்டு கொன்றுள்ளான் என்பது உறுதியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் உலகை அதிர வைத்த சம்பவம் என்றால் அது ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு நபரால் சுட்டு கொல்லப்பட்டது தான். சம்பவ இடத்திலேயே அந்த கொலையாளியை பாதுகாவலர்கள் மடக்கி பிடித்துவிட்டனர். அவனிடம் விசாரிக்கும் போது, ஏதோ மதபோதகரை சுட்டுக்கொல்ல […]
ஷின்சோ அபே ஜப்பான் நாட்டு ஆட்சியில் இருந்த போது, அவருடைய நிலைப்பாடு சீனாவுக்கு எதிராகவே இருந்ததாம். அதன் காரணமாக தான் சீனாவில் சில பகுதி மக்கள் கொண்டாடியுள்ளனர். ஜாப்பான் நாட்டு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று தனது கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கும்போது, 41 வயது மதிக்க தக்க ஒரு நபரால் சுட்டு கொல்லப்பட்டார். தேர்தல் நேரத்தில், முன்னாள் பிரதமர், அதுவும் பாதுகாப்பு கடுமையாக கொண்ட ஜப்பான் நாட்டில் இப்படி ஒரு சம்பவம் […]
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டதை அறிந்து டிவிட்டரில் பிரதமர் மோடி வருத்தத்தை தெரிவித்தார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,மேற்கு ஜப்பானில் திறந்த வெளியில் உரையாற்றும் போது, 41 வயது மதிக்க தக்க ஒரு நபரால் திடீரென சுடப்பட்டார். இதில் அவர் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டியது தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து இணையத்தில் ஷின்சோ அபே சுடப்பட்ட திக் திக் வீடியோ […]
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,மேற்கு ஜப்பானில் திறந்த வெளியில் உரையாற்றும் போது, மர்ம நபர் ஒருவரால் திடீரென சுடப்பட்டார். இதில் அவர் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டியதாக தகவல் வெளியாகியது. கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதால் சுயநினைவை ஷின்சோ அபே இழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தது. மிகவும் ஆபத்தான நிலையில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து ஷின்சோ அபேவை கொல்ல முயன்ற 41 வயது மதிக்கத்தக்க […]
ஜப்பான் நாட்டில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பான் நாட்டில் ஹோன்சு நகரில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு கடலோரப்பகுதியில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டதாக அமெரிக்க வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், ஜப்பானின் தகஹாகி […]
ஜப்பானில் ஏற்பட்ட பனிப்புயலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் போர்வைகள் வழங்கி நெடுஞ்சாலை துறை சரி செய்து வைத்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு பிரச்சினைகளால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தான் வருகின்றனர். அண்மையில் கூட தமிழகத்தில் புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் பலர் உயிரிழந்தனர். பலர் தங்களது வீடு வாசல்களை இழந்தனர். தற்பொழுதும் ஜப்பானில் பனி பொலிவு அதிக அளவில் […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை 6.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் வடகிழக்குப் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 8:14 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விரிவான தகவல் ஏதும் கொடுக்கப்படவில்லை மேலும், நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை […]
பார்வையாளர்கள் இன்றி, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் எனக்கு விருப்பமில்லை. என, டோக்கியோ 2020 தலைவர் யோஷிரோ மோரி கியோடோ தெரிவித்துள்ளார். இந்த வருடம் சரியாக இம்மாதம் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்கியிருக்கும். ஆனால், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, டோக்கியோ 2020 (ஜப்பான் நாட்டின் ஒலிம்பிக் போட்டி கமிட்டி) தலைவர் யோஷிரோ மோரி கியோடோ அண்மையில் ஒரு செய்தி சேனலுக்கு தெரிவிக்கையில், ‘ […]
கொரோனா தடுப்பு மருந்தாக ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மருந்து பட்டியலில் டெக்ஸாமெதாசோன் ( Dexamethasone ) எனும் தடுப்பு மருந்தை பயன்படுத்த ஜப்பான் நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள், கொரோனாவுக்கு மருந்து கணடறிய தீவிர ஆராய்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், பிரிட்டனில், அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக டெக்ஸாமெதாசோன் ( Dexamethasone ) எனும் மருந்தை பயன்படுத்தியுள்ளது. இந்த தடுப்பு மருந்தை […]
ஹோப் எனும் ஆளில்லா அரபு விமானம் ஜப்பானிலிருந்து முதன்முறையாக செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து கடந்த திங்கள் கிழமை ஆளில்லாத ஹோப் எனும் பெயருடைய அரபு விமானம் செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்டுள்ளது. அரபு மொழியில் அல்-அமல் எனும் பெயருடைய விமானம் காலை 6.58- க்கு திட்டமிட்டபடி ஏவப்பட்டுள்ளது. ஏவப்பட்டு ஒரு மணிநேரத்திற்கு பிறகு ஆய்வுகூடத்தில் வெற்றியடைந்த மகிழ்ச்சி கொண்டாடப்பட்டுள்ளது. இந்த அரபு விமானம் ஜப்பானில் ஏவப்படுவது இதுவே முதன்முறையாகும்.
ஜப்பானில் அதிக மழை பொழிவில் ஏற்பட்ட வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானில் அண்மையில் பெய்த கனமழையால் அங்கு அதிகப்படியகியான வெள்ளப்பெருக்கு வந்ததுடன், அநேக மக்களும் பாதிக்கப்பட்டனர். பொருளாதாரங்கள் அணைத்து சீர்குலைந்த நிலையில் உள்ளது ஜப்பான். இந்நிலையில், இதுவரை வந்த வெள்ளப்பெருக்கு அழிவில் நேற்று அதாவது வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 66 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 16 பேர் காணாமலும் போயுள்ளனர். இன்னும் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதால் காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீவிரம் […]
லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறி நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளதாவது: லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை, ஜப்பான் கடுமையாக எதிர்க்கும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஜப்பான் முழுமையாக ஆதரவு அளிக்கும்.லடாக் எல்லைப் பிரச்னை பற்றி, இந்திய வெளியுறவு செயலர், ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லாவுடன் […]
கொரோனா அச்சத்தால் இந்தியாவையும் சேர்த்து 11 நாடுகளை தங்கள் நாட்டுக்குள் வர அனுமதி மறுத்துள்ள ஜப்பான். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் இன்னும் குறைந்த பாடில்லை. 50 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்நிலையில், அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் கூட கொரோனா அலை ஓயவில்லை. இந்நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் 10 வது நாடக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. ஜப்பானுக்கும் தற்பொழுது விமான சேவை மற்றும் இயல்பு நிலை […]
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகில் உள்ள நாராயணபுரம் கிராமத்தில் வசிப்பவர்கள், தங்களுக்கு தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தால், மூன்றாவது பிறக்கும் பெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயர் சூட்டுவார்களாம். அப்படி பெயர் சூட்டினால் தான் அவர்களுக்கு நான்காவதாக ஆண் குழந்தை பிறக்கும் என்பது அந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை. இந்நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த அசோகன், கௌரி என்ற தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தை உள்ள நிலையில், மூன்றாவதாக பிறந்த பெண்குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், […]
தற்காலத்தில் பெண்களின் நவீன வகை காலணியாக ஹீல்ஸ் காலணி வகைகள் உள்ளது. இந்த காலணிகளை உலகில் அதிகமான பெண்கள் விரும்புகிறார்கள். அதில் பல வண்ண மாடல்கள் இருப்பதாலும், தங்களை உயரமாக காட்டிக் கொள்ளவும் பெண்கள் இதனை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சில உடல் ரீதியாக பிரச்சினைகள் வந்தாலும் பெண்கள் தற்போதும் அதிகம் விரும்பி அணிந்து வருகின்றனர். இந்நிலையில் ஜப்பான் நாட்டுப் பெண்கள் தங்களது அலுவலகங்களில் ஹீல்ஸ் அணிய கட்டாயப்படுத்துவதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் முத்து. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்த அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன. இப்படத்தில் மீனா ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஜாப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு அங்கும் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் அங்கும் மாபெரும் வெற்றியடைந்தது. அதற்க்கு பிறகு ரஜினிக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றங்கள் அமைந்தன. இந்நிலையில் அதே முத்து படம் 4K […]
ஜப்பான் எப்போதும் கடுமையான பூகம்பங்கள், சுனாமி என்று கடும் இயற்கைச் சீற்றங்களை, தேசியப் பேரிடர்களை அடிக்கடி சந்தித்து வரும் நாடு என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றே. இந்நிலையில் வடக்கு ஜப்பானில் உள்ள சிறிய தீவு ஒன்று காணாமல் போயுள்ளது ஜப்பான் அதிகாரிகளிடத்தில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து இந்தத் தீவு கடல்நீரில் மூழ்கிவிட்டதா என்று ஆய்வு மேற்கொள்ள ஜப்பான் முடிவெடுத்துள்ளது. இந்தத் தீவின் பெயர் இசாம்பே ஹனகிட்ட கொஜிமா 1987-ல் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இது எவ்வளவு பெரிய தீவு […]