ஹாங்காங் சென்று திரும்பிய ஜப்பான் சொகுசுக் கப்பலில் மேலும் 41 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,700 பயணிகளுடன் இருக்கும் கப்பலை நாட்டிற்கு உள்ளே அனுமதிக்காமல் துறைமுகத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலேயே ஒகினாவா மாகாணம் அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 20-ம் தேதி 3,700 பயணிகளுடன் ஜப்பானின் யோகோஹாமா நகரில் இருந்து டைமண்ட் பிரின்சஸ் கப்பல் ஹாங்காங் புறப்பட்டது. பின்னர் ஹாங்காங்கில் இருந்து அந்த கப்பல் ஜப்பானுக்கு திரும்பும்போது, கப்பலில் இருந்த 80 வயது […]