ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சுனாமியின் தாக்கத்தை ஒரு வினாடிக்குள் கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்டு புதிய தொழிநுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் 330 நிமிடங்களில் இருந்து ஒரு வினாடிக்குள் கணிக்க எடுக்கும் நேரத்தை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். 3,000க்கும் மேற்பட்ட கணினியால் உருவாக்கப்பட்ட சுனாமி நிகழ்வுகளைப் பயன்படுத்தி பயிற்சியளிக்கப்பட்ட இயந்திரக் கற்றல் முறையைப் பயன்படுத்தி இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர்.