ஜப்பான் நாட்டில் விமானம் தரையிறங்கியபோது தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம், ஹனடே ஏர்போர்ட்டில் இறங்கியபோது பயங்கரமாக தீப்பிடித்தது. பயணிகள் விமானமான ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் (JAL 516) தரையிரங்கும்போது, ஹனடே விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இதில், முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமான விமானத்தில் பயணித்த 379 பயணிகளும், நல்வாய்ப்பாக சரியான நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டனர். […]
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் (JAL 516) டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட அந்த விமானத்தில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் விமானம் மற்றொரு விமானத்துடன் மோதியிருக்கலாம் என்று ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால், நல்வாய்ப்பாக விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 300 பேர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. அந்த […]