அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக 5000-6000 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரசின் தாக்கத்தால் கொரோனா களப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் என பலரையும் […]