உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருவர் இன்று பதவியேற்க உள்ளனர். அதன்படி, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்சு தூலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜேபி பர்திவாலா ஆகியோர் இன்று டெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ளனர். நீதிபதிகள் இருவருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது […]