ஜம்மு காஷ்மீரின் தோடாவில் உள்ள செனாப் ஆற்றில் இன்று பிற்பகல் பேருந்து கவிந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு பிரிவின் தோடா மாவட்டத்தின் அசார் என்ற இடத்தில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் இருந்த சுமார் 36 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களில் 25 பேரின் உடல்கள் தற்போது வரை மீட்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பலர் காயமடைந்தனர். […]
ஜம்மு காஷ்மீர்: புல்வாமாவின் தும்சி நவ்போரா பகுதியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்தக் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து புல்வாமா மற்றும் ஜம்மு காஷ்மீரின் பிற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், தொழிலாளி ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட இச்சம்பவம் […]
2022-ஆம் ஆண்டில் 73 வழக்குகள் பதிவு செய்து, 456 பேரை கைது செய்துள்ளது என்ஐஏ. 2022-ல் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது, இது 2021ல் பதிவு செய்யப்பட்ட 61 வழக்குகளில் இருந்து 20% அதிகமாகும். இந்த எண்ணிக்கை என்ஐஏ-க்கு முன்னெப்போதும் இல்லாத உயர்வாகும். இந்த வழக்குகளில் 11 ஜம்மு காஷ்மீர், 10 இடதுசாரி தீவிரவாதம், ஏழு தடை செய்யப்பட்ட PFI உடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2022ம் ஆண்டில் 456 […]
ஜம்முவில் லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இந்திய பாதுகாப்பு படை. ஜம்மு காஷ்மீர் சித்ரா பகுதியில் லாரியில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் சித்ரா பகுதியில்சோதனையின்போது லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை சுட்டுள்ளனர். இதன்பின் பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலில் லாரியில் இருந்த 4 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், லாரியில் இருந்து 7 ஏகே47 ரக துப்பாக்கிகள், 3 துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
ஜம்மு – காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழப்பு. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே அடையாளம் தெரியாத பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து போலீஸ், பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் தீவிர சோதனையில் […]
காஷ்மீரில் வெளிமாநில மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் ஆலோசனை. ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் நோவலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது உயர்மட்ட அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ […]
குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். எலாகி டெஹாட்டி (Ellaqui Dehati Bank) வங்கியின் ஊழியர் விஜய் குமார் வங்கி வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கவாதிகள் தாக்குதலை தொடர்ந்து உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வங்கி ஊழியர் விஜய் குமார் வழியிலேயே உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. […]
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவரான யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் காஷ்மீரை சேர்ந்த யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. காஷ்மீரில் தீவிரவாதத்தை தூண்ட சட்டவிரோத பணபரிவர்தனையில் ஈடுபட்டதாக தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ) ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவரான யாசின் மாலிக் மீது வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் முக்கிய வழக்காக […]
ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடத்த மோதலில் 3 பேர் பயங்கரவாதிகள் சுட்டுகொலை. ஜம்மு காஷ்மீர் மாநிலம், அமர்நாத் யாத்திரையின் முக்கிய பாதையான அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் பாதுகாப்புப் படையினருடன் நடத்த மோதலில் 3 பேர் பயங்கரவாதிகள் சுட்டுகொலைப்பட்டனர். இந்த வழித்தடத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்துவதில் இன்றைய என்கவுன்டர் ஒரு பெரிய வெற்றி என்று அம்மாநில காவல்துறை கூறியுள்ளது. இன்று சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில், ஒருவர் நீண்ட நேரமாக உயிர் பிழைத்த […]
சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு. ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்துள்ளார் என தகவல் கூறப்படுகிறது. உயிரிழந்த எம்என் மணி திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, உள்ள அதிமஞ்சரைப்பேட்டையை சேர்த்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழக வீரர் எம்என் மணி உள்பட சிஆர்பிஎப் வீரர்கள் 12 சென்ற பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. ஹைடர்போரா என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த வீரர் மணி […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் உள்ள சிஆர்பிஎஃப் முகாம் மீது புர்கா அணிந்த பயங்கரவாதி வெடிகுண்டு வீச்சு. ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம் சோபோர் நகரில் உள்ள சிஆர்பிஎஃப் முகாம் மீது நேற்று மாலை புர்கா அணிந்த பயங்கரவாதி ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இஸ்லாமிய உடை அணிந்திருந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதி, நடுத்தெருவில் நின்று, தன் பையில் இருந்த வெடிகுண்டை எடுத்து, சிஆர்பிஎஃப் […]
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிசூடு சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் ராணிபோரா பகுதியில் உள்ள குவாரிகத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்திய பாதுகாப்பு படை பதிலடி கொடுத்தன. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட […]
ஜம்மு – காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழந்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் மீண்டும் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பதிலுக்கு இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர் […]
ஜம்மு-காஷ்மீரில் சந்திரா பட்டீல் என்ற ராணுவ வீரர் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டம் சவூரா பகுதியை சேர்ந்தவர் சந்திரா பட்டீல் .ராணுவ வீரராக பணிபுரியும் இவர் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். ராணுவ வீரரான சந்திரா பட்டீல் தனது துப்பாக்கி மூலம் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இச்சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு தற்கொலைக்கான காரணத்தை போலீசார் […]
ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 8 மணியளவில் இந்திய எல்லையைத் போர் நிறுத்தத்தை மீண்டும் மீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவ ட்ரோனைப் பயன்படுத்தி ஊடுருவி முயற்சி செய்தபோது, இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ ட்ரோனை சுட்டு வீழ்த்தினார். 2020-ல் 3,800 முறை அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் -இந்தியா குற்றச்சாட்டு.! இந்த ட்ரோன் சீன நிறுவனமான டி.ஜே.ஐ மேவிக் 2 புரோ மாடல் தயாரித்த பாகிஸ்தான் ட்ரோன் என்று கூறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது, பயங்கரவாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், பயங்கரவாதிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர்களை சரணடையும்படி வற்புறுத்துவதற்காக ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் என்கவுன்டர் அழைத்து வரப்பட்டனர். பின்னர், குடும்பத்தினர் வற்புறுத்துத்தலை தொடர்ந்து இரண்டு பயங்கரவாதிகள் சரணடைந்ததாக ஐஜிபி காஷ்மீர் விஜய்குமார் நேற்று தெரிவித்தார். இவர்கள் அல்-பத்ர் பயங்கரவாதிகள் ஆபிட் மற்றும் மெஹ்ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். […]
ஜம்மு-காஷ்மீரில் காண்டர்பால் மற்றும் உதம்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களைத் தவிர அக்டோபர் 21-ம் தேதி வரை விதிக்கப்பட்ட 4 ஜி இணைய சேவைகளுக்கான தடையை மேலும் நவம்பர் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த ரத்து செய்யப்பட்டதால் அங்கு இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரியில் குறைந்த வேக 2 ஜி இணைய சேவை வழங்கப்பட்டது. பின்னர், கடந்த ஆகஸ்ட் 15, அன்று உதம்பூர் மற்றும் காண்டர்பால் ஆகிய […]
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் சில நிமிடங்களுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரின் பாட்மாலூ பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றிய தகவல் கிடைத்ததும், அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தபோது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் சுரங்கப்பாதை அருகே ஜம்முவிலிருந்து வந்த லாரியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பயங்கரவாதிகளை நேற்று இரவு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் ராணுவம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.