ஜம்மு – காஷ்மீரில் வெடி பொருள்களுடன் பறந்த ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர். ஜம்மு – காஷ்மீரில் சமீப நாட்களாக ட்ரோன்கள் பறப்பது வழக்கமாகி உள்ளது. ஆனால்,பாதுகாப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு, ட்ரோன்களின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர். வெடிபொருளுடன் பறந்த ட்ரோன் ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள, கனச்சக் என்ற இடத்தில் வெடிபொருள்களுடன் ஒரு ட்ரோன் பறந்துள்ளது. இந்த ட்ரொனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ட்ரோன் நடமாட்டத்தின் பின்னணி சுட்டு […]
ஜம்மு – காஷ்மீரில் நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு. இன்று காலை ஜம்மு – காஷ்மீரின் ஹான்லே நகரில் இருந்து வடமேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே நாட்டின் வடபகுதியில் உள்ள அருணாச்சலப்பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிற நிலையில், […]
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு சிபிஆர்எஃப் வீரர், ஒரு கிராமவாசி உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சோபாரில் சிபிஆர்எஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு வந்த பயங்கரவாதிகள், வீரர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 சிபிஆர்எஃப் வீரர்கள் உட்பட, கிராமவாசி ஒருவர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, 5 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த […]
ஜம்மு காஷ்மீர் இல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எப்போதோ போடப்பட்டுவிட்டது. இருந்தும், பாகிஸ்தான் வீரர்கள் அவ்வப்போது தொடர்ந்து காஷ்மீரில் உள்ள இந்திய எல்லைகளில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவ்வாறு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மற்றும் குப்வாரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அப்பகுதியை சேர்ந்த ஜாவீத் கான், ரசூல் கான், சவுகிபால் ஆகியோர் […]
ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரம்பரிய லடாக் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா ஜம்மு காஷ்மீரில் இரண்டு நாட்கள் நடைபெறும். இந்த பாரம்பரிய விழாவின் சிறப்பு என்னவென்றால், அப்பகுதியில் நிலவும் புராணங்கள், நீதிக்கதைகளை சித்தரிக்கும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியினை புத்த துறவிகள் நடத்துகின்றனர். இந்த லடாக் திருவிழாவில் இடம் பெரும் நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து செல்கின்றனர்.