ஜம்மு விமான நிலையத்தில் அடுத்தடுத்த குண்டு வெடிப்பு..!
ஜம்மு விமான நிலையத்தில் நள்ளிரவு 1.40 மணியளவில் இரண்டு குண்டு வெடிப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு விமான நிலையத்தின் தொழில்நுட்ப பகுதியில் நள்ளிரவு 1.40 மணியளவில் 5 நிமிட இடைவெளியில் இரண்டு குண்டு வெடிப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன. முதல் குண்டுவெடிப்பு விமான நிலைய தொழில்நுட்ப பகுதியின் மேற்கூரையை கிழித்தெறிந்தது.இரண்டாவது குண்டு கீழே தரையில் வெடித்து.இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் பெரும் சத்தம் எழுப்பும் அளவிற்கு,இந்த குண்டுவெடிப்பின் தாக்கம் இருந்ததாகவும், எனினும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை […]