அசம்பாவிதங்கள் நடைபெறப்போவது குறித்து ஏதேனும் தகவல் முன்கூட்டியே தெரிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. – கோவை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். கோவையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்து கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். பின்னர் நடந்த விசாரணையில் முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தமிழக காவல்துறை மேற்கொண்டு வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அமைப்பு […]