டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 49, காங்கிரஸ் 36 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்படி, ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக கட்சி. இந்நிலையில், ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முடிவுகள் ஹரியானா மக்களின் விருப்பத்திற்கு எதிரான ஒன்றாகும். ஹரியானாவில் வாக்கு எண்ணும் செயல்முறை, மின்னணு வாக்குப்பதிவு […]
புது டெல்லி : பல நாடுகளுக்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி, மணிப்பூருக்கு மட்டும் இதுவரை செல்லவில்லை என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். புதுடெல்லி, மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வர அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். கலவரம் தொடர்பாக இதுவரை 1100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் […]
டெல்லி: மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை (ஜூன் 4) வெளியாக உள்ள நிலையில், இன்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்த்தினார். அதில், தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கான விளக்கங்களை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது குறித்து விளக்கம் அளித்தார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு எதிராகவும் ராஜீவ் குமார் கருத்து தெரிவித்திருந்தார். முன்னதாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் தனது சமூக வலைத்தளம் வாயிலாக விமர்சனம் […]
காங்கிரஸ்: தேர்தல் வெற்றிக்கு பின்னர் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க 48 மணிநேரம் கூட ஆகாது – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நாளை மறுநாள் (ஜூன் 1) உடன் தேர்தல் நிறைவடைய உள்ளது. இதில், NDA கூட்டணியில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் வேட்பாளர் யார் என கூட்ட்டணிக்குள் முடிவு எட்டப்படவில்லை. இது குறித்து இன்று PTI செய்தி நிறுவனத்திற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் […]
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மம்தா பேனர்ஜி, தாங்கள் இந்தியா கூட்டணியில் இருப்பதாகவும், அனால் மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று இருவேறு மாறுபட்ட கருத்துக்களை கூறினார். இந்தியா கூட்டணி தான்.! ஆனாலும் தனித்து போட்டி.! காங்கிரசுக்கு ‘ஷாக்’ கொடுத்த மம்தா.! மேலும், நாட்டில் அடுத்து என்ன […]
அரசியல் சாசனத்துக்கு விரோதமாக மாநிலங்களுக்கான நிதியை குறைக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான ஆடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு, பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியின் அரசியல் சாசன விரோத செயலை நிதி ஆயோக் தலைமை அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார். 14வது நிதிக் குழுவை மிரட்டி, மாநில அரசுகளின் வரி வருவாயில் இருந்து திருட அனுமதிக்கும் வகையில், பிரதமர் மோடியே அரசியல் சாசனத்துக்கு […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. என காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடுதலைக்கு காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பபை தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உச்சநீதிமன்றம் இந்தியாவின் […]