சீனா கண்டுபிடிக்கும் கொரோனா தடுப்பூசியை நாங்கள் வாங்கமாட்டோம் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ தெரிவித்துள்ளார். சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமடைந்துள்ளது. அதற்கான இறுதி கட்ட சோதனைக்கு விரைந்துள்ளனர். மேலும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என உலக நாடுகள் எதிர்பார்த்து உள்ளன. […]