ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாலி மாவட்டம் ரயில் பாலத்தில் புகைப்படம் எடுக்க முயன்ற தம்பதியர், ரயில் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, 90 அடி ஆழமான பள்ளத்தில் குதித்தனர். ரீல்ஸ் மற்றும் செல்பீ எடுப்பதற்காக பலரும் ஆபத்தை உணராமல் சில மோசமான செயல்களில் ஈடுபடுவது உண்டு. அப்படி தான், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு பாலத்தில் செல்பி எடுத்து கொண்டிருந்த போது, தம்பதியினர் தங்கள் உயிரைக் காப்பாற்ற 90 அடி ஆழமான பள்ளத்தாக்கில் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாலத்தில் […]
ஜெய்ப்பூர் : ஜெய்பூரில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை ஸ்பைஸ்ஜெட் நிறுவனவத்தில் வேலை செய்து வரும் பெண் ஊழியர் கன்னத்தில் அறைந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில் ஸ்பைஸ்ஜெட் (Spicejet) விமான நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) உதவி காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்துள்ளார். இவரை அறைந்த இந்த காட்சியானது அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகி இருந்தது. மேலும், அரசாங்க அதிகாரியை […]
ஜெய்ப்பூர்: அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தான் செரிஸ். இவர் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு கடையில் ரூ.6 கோடி மதிப்பிலான போலியான நகைகளை வாங்கியுள்ளார். ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் இருக்கும் ஜோரி பஜாரில் கவுரவ் சோனி கடை உள்ளது. செரிஸ், தனது இன்ஸ்டாகிராம் மூலம் கவுரவ் சோனி என்ற நகைக்கடைக்காரரின் தொடர்பு கிடைத்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா வந்தபோது இந்த கடையில் தங்க மூலம் பூசப்பட்ட வெள்ளி நகைகளை ரூ.6 கோடிக்கு செரிஸ் வாங்கியிருக்கிறார். அமெரிக்காவில் கடந்த […]
ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டல் ஊழியர் ஒருவரின் அறைக்குள் திடீரென சிறுத்தை புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அறைக்குள் சிறுத்தை இருப்பதை கண்ட அந்த ஹோட்டல் ஊழியர், சாதுரியமாக கதவை மூடி வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார் ஹோட்டல் நிர்வாகத்திடம் இருந்து தகவல் கிடைத்ததும், வனத்துறை மற்றும் ஜெய்ப்பூர் மிருகக்காட்சிசாலையின் குழுவினர் உடனடியாக அந்த இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி சிறுத்தையை வெற்றிகரமாக பிடித்து அதற்கு முதலுதவி அளித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டுள்ளனர். அரசு பங்களாவை […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் இன்டர்நேஷனல் சென்டரில் 2023 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய இயக்குநர் ஜெனரல்கள், இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இன்று ஜெய்ப்பூர் வருகிறார்கள். இன்று முதல் ஜனவரி 5 முதல் ஜனவரி 7 வரை நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாட்டில், சைபர் கிரைம், காவல்துறையில் தொழில்நுட்பம், பயங்கரவாத எதிர்ப்பு சவால்கள், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் […]
திருமண பந்தத்தில் சின்ன சின்ன விஷயங்களில் கூட கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படுகிறது. அதனால் நான் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டேன். – பூஜா சிங், ஜெய்ப்பூர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த இளம் பெண் பூஜா சிங் இம்மாதம் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படி திருமணம் செய்யும் போது எந்தெந்த சடங்குகள் செய்வார்களோ அது அத்தனையும் செய்யப்பட்டது. இந்த திருமணம் பற்றி பூஜா சிங் கூறுகையில் , திருமண பந்தத்தில் […]
ஜெய்ப்பூர் மேயர் பதவியில் இருந்து பாஜக கவுன்சிலரை ராஜஸ்தான் அரசு டிஸ்மிஸ் செய்தது. முன்னாள் கமிஷனர் யக்யா மித்ரா சிங் தியோவை தாக்கியதாக வழக்கில் விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷனின் மேயரான பாஜக கவுன்சிலர் சோமியா குர்ஜரை ராஜஸ்தான் அரசு பதவி நீக்கம் செய்துள்ளது. மேலும் குர்ஜார் ஆறு ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துணை மேயர் புனித் கர்னாவத், அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக கடுமையான […]
மொழி அடிப்படையில் சர்ச்சையைக் கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு. பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மொழியும் இந்தியாவின் அடையாளம் தான். மாநில மொழிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் சர்ச்சையை கிளப்ப முயற்சி நடக்கிறது என்றும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை பாஜக ஒவ்வொரு பிராந்திய மொழிகளிலும் காண்கிறது எனவும் கூறினார். புதிய கல்வி கொள்கையில் ஒவ்வொரு பிராந்திய […]
ராஜஸ்தானில் கொலை வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை குரங்கு திருடி சென்ற வினோதம் சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக, ஒரு குற்றத்தைச் செய்து பின்னர் ஆதாரங்களை அழிப்பவர்கள் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள். ஆனால் ஒரு மிருகம் மனிதன் செய்த குற்றத்திற்கான ஆதாரத்தை அழித்துவிட்டால் என்ன செய்வது. அப்படியொரு சம்பவம் தான் அரங்கேறியுள்ளது. அதாவது, ராஜஸ்தானில் ஒரு குரங்கு கொலை வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன் தப்பி ஓடியுள்ளது. இது காவல்துறைக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. அந்த ஆதாரத்தில் கொலை ஆயுதம் […]
ஜெய்ப்பூரில் அருகே எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தொழிற்சாலை ஜெய்ப்பூரில் உள்ள ஜாம்வா ராம்கரில் அமைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்த சிஓ சிவகுமார், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பெயிண்ட் பொருட்கள் பேக்கிங் செய்யும் பிரிவில் தீ […]
செப்டம்பர் 3ம் தேதி Money Heist பார்க்க ஊழியர்களுக்கு நெட்ஃபிக்ஸ் அண்ட் சில் என்ற விடுமுறையை அளித்த ஜெய்ப்பூர் நிறுவனம். செப்டம்பர் 3-ஆம் தேதி, நாளை மறுநாள் நெட்ஃபிக்ஸில் பிரபல வெப் சீரியஸான மணி ஹெய்ஸ்டின் சீசன் 5 வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த தொடரை காண்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள Verve logic என்ற தனியார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், உலகளவில் புகழ்பெற்ற ஸ்பானிஷ் சீரியஸான லா […]
ஜெய்ப்பூரில் மது அருந்துவதற்காக தனது 2 வயது மகளை விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் ரமேஷ் என்பவர் மதுவிற்கு அடிமையாகி தனது 2 வயது இளைய குழந்தையை விற்றுள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. கடந்த மாதம் இவருக்கும் இவரது மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வருவதை நிறுத்த கூறிய மனைவியை உடல்ரீதியாக தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். பின்னர், ரமேஷ் தனது 2 வயது இளைய […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி,தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், இன்று (27.05.2021) வியாழக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 16 பைசா உயர்ந்து ரூ.100.05க்கும், ஒரு லிட்டா் ரூ.93.36 க்கும் விற்பனையாகி […]
ஜெய்ப்பூர்-டெல்லி பாதையில் இரண்டு அடுக்கு ரயில் வருகின்ற அக்டோபர் 10 முதல் மீண்டும் இயக்கப்படும் என்று வடமேற்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார். இந்த ரயில் தினமும் காலை 6 மணிக்கு ஜெய்ப்பூரிலிருந்து புறப்பட்டு டெல்லி சராய் ரோஹில்லா ரயில் நிலையத்தை காலை 10.30 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இது டெல்லி சாராய் ரோஹில்லாவில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு ஜெய்ப்பூரை அடையும். இதற்கிடையில், மார்ச் மாதம் […]
ஜெய்பூரில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இரண்டு அரிய மரபணு நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஜெய்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இரண்டு அரிய மரபணு நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,இது உலகில் முதல் நோய் என்றனர். அந்த குழந்தைக்கு பாம்பே நோய் மற்றும் முதுகெலும்பு தசைநார் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக ஜே.கே.லோன் மருத்துவமனையின் ஒரு மருத்துவர் நேற்று தெரிவித்தார். பாம்பே நோய் வளர்சிதை மாற்றத்தின் ஒரு அரிதான பிறப்பு பிழை […]
கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறிய ஆறு எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் சேர்ந்தனர்.பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் தொடர்பு கொள்ள முயற்சிக்கும், இதனால், 15 முதல் 20 பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள […]
கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறிய ஆறு எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் சேர்ந்தனர். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கின் விசாரணை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது. நாளை விசாரணையில் 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பு […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கையகப்படுத்தப்பட்ட தங்கள் நிலங்களுக்கு உரிய தொகையை வழங்கக் கோரி விவசாயிகள், கழுத்தளவு ஆழக் குழிக்குள் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெய்ப்பூர் அருகே வீடு கட்டும் திட்டத்திற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஜமீன் சமாதி சத்யாகிரகம் எனும் இந்த போராட்டத்தில் தங்களை மண்ணுக்குள் புதைத்து கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அமைதியான […]
உத்தரப்பிரதேசத்தில் லாரி மீது பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது.இதில் 20 பேர் இறந்தனர். இந்த விபத்தில் இறந்த குடும்பத்தில் இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்திலிருந்து ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரை நோக்கி 45 பயணிகள் கொண்டு ஒரு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.அப்போது இந்த பேருந்து கணோஜ் மாவட்டத்தில் உள்ள சிலோய் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்து எதிர்பாராதவிதமாக லாரி மீது […]
பள்ளியில் பேனாவை எடுத்து சென்றதற்காக 10 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்று சண்டையிட்டு கம்பியால் தாக்கி 12 வயது சிறுமி கொலை செய்துவிட்டார். அதனை மறைக்க 12 வயது சிறுமியின் பெற்றோர் முயற்சி செய்ததால் அவர்களும் தற்போது கம்பி எண்ணுகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் பயின்று வருகிறார் 12 வயதான ரேஷ்மா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) எனும் சிறுமி. இதே பள்ளியில் ஒரு 10 வயது நிரம்பிய சிறுமியும் படித்து வந்துள்ளார். அந்த […]