ஈஷா அறக்கட்டளையின் நதிகளை மீட்போம் இயக்கத்தின் உதவியுடன் வாகாரி நதியை புத்துயிரூட்டும் திட்டத்துக்கு மஹாராஷ்ட்ரா மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி ரூ.415 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த நதிகளை மீட்போம் இயக்க உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவையும் அமைத்துள்ளது. இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகம் நிகழும் யவத்மால் பகுதியில் உள்ள வாகாரி நதியை புத்துயிரூட்டுவதற்கு ஈஷா அறக்கட்டளையின் நதிகளை மீட்போம் இயக்கத்துடன் மஹாராஷ்ட்ரா மாநில […]
கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று மஹாசிவராத்திரி விழா நடைபெறுகிறது. பிரபல இசை கலைஞர்கள் அமித் திரிவேதி, ஹரிஹரன், கார்த்திக் பங்கேற்கின்றனர். கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று மஹாசிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பிரபல இசையமைப்பாளர்கள் திரு.அமித் திரிவேதி, திரு.ஹரிஹரன் மற்றும் பின்னணிப் பாடகர் கார்த்திக் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. நம் கலாச்சாரத்தில் மஹாசிவராத்திரி என்பது மிக முக்கியமான ஒரு நாளாகும். குறிப்பாக, ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு அவர்கள் […]
ரசாயனம் இல்லாத இயற்கை உணவை உண்ண வேண்டும் என்ற ஆர்வம் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் உருவாகி உள்ளது என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் நேற்று ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு திருச்சி தொடங்கியது. இதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மற்றும் வேளாண் வல்லுனர் சுபாஷ் பாலேக்கர் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மறைந்த நெல் ஜெயராமன் அவர்களுக்கு ஒரு நிமிடம் மெளன […]