Jaggery– வெல்லத்தில் கலப்படம் கண்டுபிடிப்பது எப்படி எனவும் சீனியை விட வெல்லம் சிறந்ததா என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். நம்மில் பலரும் சீனியை விட வெல்லம் தான் சிறந்தது என்று டீ காபிகளில் பயன்படுத்தி வருகிறோம். அது மட்டுமல்லாமல் சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா என்றும் தெரிந்து கொள்ளவோம் . வெல்லம் தயாரிக்கும் முறை; கரும்பிலிருந்து சாறு எடுத்து அந்த சாறு கொப்பரையில் ஊற்றி கொதிக்க வைக்கப்படுகிறது. கொதிக்கும்போது வரும் அழுக்குகள் நீக்கப்படுகிறது .அந்த அழுக்கு நீக்கப்படுவதற்கு […]
ஊத்தப்பம் சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். ஏனென்றால், அதன் சுவை அட்டகாசமானதாக இருக்கும். ஆனால், இந்த ஊத்தாப்பத்தை ஜவ்வரிசி வைத்து எப்படி தயாரிப்பது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி அரிசி ஜவ்வரிசி உளுந்து கடுகு பெருங்காயம் உளுத்தம்பருப்பு பச்சை மிளகாய் உப்பு எண்ணெய் செய்முறை அரைக்க : முதலில் அரிசி மற்றும் உளுந்து ஆகிய இரண்டையும் ஊற வைத்து தோசைக்கு அரைப்பது போல நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் […]
இரவு நேரத்தில் லேசான சாப்பாடுகள் சாப்பிட வேண்டும் என்று விரும்புவது வழக்கம். சுவையாக வித்தியாசமான முறையில் ஜவ்வரிசி சுண்டல் எவ்வாறு செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள் ஜவ்வரிசி பாசிப்பருப்பு துருவிய தேங்காய் உப்பு எண்ணெய் கடுகு கருவேப்பிலை பச்சை மிளகாய் பெருங்காயத் தூள் செய்முறை ஜவ்வரிசியை நான்கு மணி நேரமாவது நீரில் நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் பாசிப் பருப்பை போட்டு லேசாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். […]
இன்றைய கால கட்டத்தில் இளம்பெண்கள் பலரும் ஊட்ட சத்துக்கள் குறைபட்டால் அவதிபடுகின்றனர். இதனால் அவர்கள் மிகவும் எளிதில் நோய்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு அதில் இருந்து மீள முடியாமல் போகும் அபாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இதற்கெல்லாம் முக்கியகாரணம் என்னவென்றால் போதிய உணவுகள் உட்கொள்ளாமையும் , சரியான நேரங்களில் உணவுகளை எடுத்து கொள்ளாமல் நேரம் தாழ்த்தி உணவுகளை எடுத்து கொள்வதும் ஒரு முக்கிய காரணமாகும்.மேலும் அவர்கள்உண்ணும் உணவுகளில் ஊட்ட சத்துக்கள் குறைபாடுகள் இருப்பதும் ஒரு காரணமாகும். எனவே இளம்பெண்களை ஊட்ட சத்து […]
பொங்கல் பண்டிகையையொட்டி சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தைத்திருநாளையொட்டி, தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் வெல்லம், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, 2 ஆயிரத்து 200 ரூபாய் வரை விற்பனையான ஒரு மூட்டை வெல்லம், தற்போது ஆயிரத்து 400 ரூபாய் வரை மட்டுமே விற்பனை […]
பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் தயாரிக்கும் பணி, மதுரையை அடுத்த குமாரகம் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சர்க்கரை பொங்கல் இல்லாமல் பொங்கல் பண்டிகை கிடையாது. இதற்கு தேவையான வெல்லம் தயார் செய்யும் பணி மதுரை குமாரகம் பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கரும்பு பிழியும் எந்திரம் மூலம் சாறெடுத்து ஒரு பெரிய இரும்பு சட்டியில் அந்த சாறை ஊற்றி கொதிக்க விடுகின்றனர். கரும்பு சாறு கொதித்து வரும்போது அதிலுள்ள அழுக்குகளை அகற்றி, மரப் பெட்டியில் ஊற்றி ஆற […]