மேற்கு வங்க ஆளுநரான ஜக்தீப் தன்கர், துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்ட கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு இறுதி செய்யப்பட்டது.