கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தினமும் புதிதாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், ஆந்திராவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதுவரை ஆந்திராவில் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், […]
கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்த ஓட்டலில் நடந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சுவர்ணா பேலஸ் என்ற ஓட்டல் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக திடீரென ஓட்டலில் தீ […]
விஷ வாயு பாதிப்பு ஏற்பட்ட விசாகபட்டினத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இயங்கி வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் இருந்து விஷவாயு சசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கும்பல் கும்பலாக சாலையில் மயங்கி விழுகின்றனர். இதன் காரணமாக இதுவரை ஒரு குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 2000 பேர் இந்த விஷ வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த […]
ஜெகன் மோகன் ரெட்டி மீது கடந்த 2011 -ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக கூறி வழக்குப் பதிவு சிபிஐ செய்தது. நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு வேண்டும் என சிபிஜ நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மனு தாக்கல் செய்தார். ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கடந்த 2011 -ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக கூறி வழக்குப் பதிவு சிபிஐ செய்தது.பின்னர் 2012 -ம் ஆண்டு […]
நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியிருந்தார். ஜெகன்மோகன் ரெட்டிதேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். ஆந்திராவில் அமல்படுத்த மாட்டோம்” என கூறினார். குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த குடியுரிமை சட்ட திருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் அடுத்த திட்டமாக […]
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதல் 7 நாட்களில் விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்படும். பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நாளில் இருந்து 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் சமீபத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரைக்கைது செய்து என்கவுண்டர் செய்தனர். பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை […]
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உடனடியாக தூக்கு தண்டனை கொடுக்க ஒரு புதிய சட்ட மசோதாவை ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்து உள்ளார். இன்று ஆந்திர சட்டப்பேரவையில் இந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்காக பல நடவடிக்கைகள் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.சமீபத்தில் தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் […]
கண்டலேறு ஆறு ஆற்று நீர்ப் பாசனத்திற்கான கட்டப்பட்டது. இந்த ஆறு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் உள்ளது. தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் அங்கிருந்து சென்னைக்கு நீர் கொடுக்கப்படுகிறது. ஸ்ரீசைலம் அணைக்கட்டின் வழியாக சென்னை வந்தடையும் . தமிழக, ஆந்திர இரு அரசுகளின் ஒப்பந்தத்தின்படி 12 டி.எம்.சி நீரை கிருஷ்ணா ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்கப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிக்கு தண்ணீர் திறந்து விடப்படாததால் பூண்டி ஏரிக்கு வர வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. […]