ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், இந்த சர்ச்சை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிப்பதாக ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் […]
ஒய்எஸ்ஆர்சிபி: ஆந்திர மாநிலத்தில் உள்ள, குண்டூர் மாவட்டம் தாடே பள்ளி அடுத்த சீதா நகரத்தில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான படகு இல்லம் (Boat House) இருந்தது. கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் அந்த படகு இல்லம் இடித்து தள்ளப்பட்டது. மேலும், இடிக்கப்பட்ட படகு இல்லத்தை குறைந்த குத்தகை வாடகைக்கு எடுத்து அங்கு பிரம்மாண்ட முறையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகம் கட்டும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் […]
ஆந்திரப் பிரதேசம் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பற்றிய பரபரப்பான விவாதத்திற்கு மத்தியில், தேர்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, ‘எக்ஸ்’ தளத்தின் உரிமையாளரும் டெஸ்லா சிஇஓவுமான, எலோன் மஸ்க், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நாம் அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது AI மூலம் ஹேக் செய்யப்படும் ஆபத்து உள்ளது என்று ட்வீட் […]
கொற்றலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகள் கட்ட இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சென்னை மாநகரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும், கொற்றலை ஆற்றின் குறுக்கே சித்தூர் மாவட்டத்தில் இரண்டு அணைகள் கட்ட ஆந்திர அரசு முடிவு எடுத்துள்ளது. அதற்கான வேலைகளில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஈடுபட தொடங்கினார். கொற்றலை ஆறு ஓடும் பெரும் பரப்பளவில் சிறிய பகுதி மட்டுமே ஆந்திராவில் இருக்கிறது. […]
ஜெகன் மோகன் ரெட்டியின் புதிய அமைச்சரவையில் ரோஜாவுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திர மாநிலத்தில் நாளை காலை புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. இந்த புதிய அமைச்சரவையில் 25 பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 15 புதுமுகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த புதிய அமைச்சரவையில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமாகிய ரோஜாவுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரோஜாவும் நாளை காலை அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
ஆந்திராவில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ இணைப்பைப் பெறுவதற்கான திட்டத்தை அரசு திட்டமிட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ இணைப்பைப் பெறுவதற்கான திட்டத்தை திட்டமிட்டுள்ளது. அரசு முதலில் 1,000 பள்ளிகளைப் பெற முயற்சிக்கும் என்று கல்வி அமைச்சர் ஆதிமூலபு சுரேஷ் கூறினார். மேலும், அவர் கூறுகையில், 3 ஆம் வகுப்பிலிருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் பாட வாரியாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றும் எந்த ஆசிரியரும் இரண்டு வெவ்வேறு பாடங்களைக் கற்பிக்கக்கூடாது என்று அரசு முடிவு […]
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு இரண்டு கோடி செலவில் மதுசூதன் ரெட்டி எனும் எம்.எல்.ஏ கோவில் ஒன்றை காட்டியுள்ளார். ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் அம்மாநிலத்தில் நல்லாட்சி புரிந்து வரும் நிலையில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் ஆட்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி என்பவரால் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இரண்டு கோடி […]
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் சகோதரி தான் ஒய்.எஸ்.ஷர்மிளா. இவர் தனது தந்தை எஸ் ராஜசேகர் ரெட்டி அவர்களின் பிறந்த தினமான இன்று ஆந்திராவில் புதிதாக கட்சி ஒன்று துவங்க உள்ளதாக கூறியுள்ளார். இன்று மாலை இந்த கட்சி துவக்க விழா நடைபெற உள்ளதாகவும், கொரோனா பரவல் காரணமாக மிகக் குறைவானவர்களே அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த […]
ஆந்திரப்பிரதேசத்தில் ஜூன் 20 வரை ஊரடங்கு நீட்டிப்பு. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு ஜூன் 10 ஆம் தேதி வரை ஊரடங்கை அறிவித்திருந்தார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. தற்போது, இரண்டாம் அலை கட்டுக்குள் வராத நிலையால் அம்மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டித்து உள்ளனர். இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இன்னும் 3 நாட்களில் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், ஜூன் 20 ஆம் […]
ஆந்திராவில் ஜூன் 10 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள தளர்வில் எந்த மாற்றமுமில்லை. புதியதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15,000 க்கும் கீழாக சென்றுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஜூன் 10 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது .தற்போதைய நடைமுறையில் உள்ள தளர்வு, காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூட […]
ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகள் தொடங்குபவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் இலவசம் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று மாநகராட்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சுகாதாரதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையில் அவர் பேசியது ” ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு ஆந்திராவிற்கு என்று சிறந்த மருத்துவமனைகள் எதுவும் இல்லாத காரணத்தினால், இங்குள்ள பொதுமக்கள் சிகிச்சைக்காக தமிழகம் , கர்நாடகா மற்றும் தெலுங்கானா என பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல […]
ஒய் எஸ் ஆர் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமாகிய ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் சகோதரி ஷர்மிளா புதிய அரசியல் கட்சி ஒன்றை துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் மதிப்பிற்குரிய முதல்வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆகிய ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி தான் ஷர்மிளா. இவரது சகோதரி புதியதாக ஒரு அரசியல் கட்சி துவங்க உள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் […]
ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்திருப்பதால், இதற்கு அடிமையாகிய பலர் தங்களுடைய லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பல இளைஞர்கள் வட்டிக்கு வாங்கிருந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்ற சம்பவம் நடந்து வருகிறது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பல மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் […]
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மாநிலத்தில் ஆறுகள் வெள்ளத்தில் மூழ்குவதால் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார். கோதாவரி ஆற்றில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை வருவாய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுமாறு முதல்வர் அறிவுறுத்தினார். மேலும் முதல்வர் அலுவலகத்தின் ஒரு அறிக்கையின்படி, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் […]
ஆந்திர மாநிலத்தில் 13 சதவிகிதம் மதுக்கடைகளை மூட அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் மே மாத இறுதியில் 13 சதவிகிதம் மதுக்கடைகளை மூட அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே அங்கு 20 சதவிகிதம் மதுக்கடைகள் மூடிய நிலையில், தற்போது மேலும் 13 சதவிகிதம் மூட முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆந்திராவில் தற்போது 3,469 கடைகள் உள்ள நிலையில், 13 சதவிகிதம் மூடப்பட்டால் 2,934 மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடப்படுகிறது.
விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்குவதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்குவதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் வெண்டிலேட்டர் பிரிவில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து விஷவாயு தாக்கி உயிரிழந்த கால்நடைகளுக்கு நஷ்ட ஈடாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவவதும் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய, செல்லும் தொழிளார்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரும் 31 ம் தேதி வரை ஆந்திர எல்லைகள் மூடப்படும் என்றும் ஏழை குடும்பங்களுக்கு […]
ஆந்திராவில் ப்ரீபெய்டு முறையில் மது விற்பனை செய்ய ஜெகன் மோகன் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. ஆதார் மற்றும் பேன் கார்ட் ஜெராக்ஸ் கொடுத்து ஐந்தாயிரம் ருபாய்க்கு ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவிக்கு வந்த பிறகு புது புது திட்டத்தை அமலுக்கு கொண்டு வருகிறார். இதனை மக்களும் வரவேற்று வருகிறார்கள். அதில் தற்போது மது அருந்துபவர் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் மதுவிலக்கு திட்டத்தை அமல்படுத்துவதாக ப்ரீபெய்டு முறையில் மது விற்பனை […]
ஆந்திராவில் தற்போது பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது குறி வைத்துள்ள திட்டம் ஆந்திராவில் பூரண மதுவிலக்கு. அதற்கு தற்போது முதற்படியாக லைசென்ஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தி முதல்வர் திட்டமிட்டுள்ளார். இதுவரை 798 பார் லைசென்சை ஆந்திர அரசு ரத்து செய்துள்ளது. மேலும், மூன்று நட்சத்திர ஹோட்டல் மற்றும் அதற்கு மேல் உள்ள ஹோட்டல்களில் பார் லைசென்ஸ் பெறுவதற்கு 10 லட்சம் கட்டணம் […]
நான் சொல்லும் யோசனைகளை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தான் செயல்படுத்துகிறார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையின் கீழ் ஆந்திராவில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக தான் பதவி ஏற்ற நாள் முதலே அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே சென்று விநியோகிக்கப்படும் என்று அறிவித்தார்.வரலாற்றில் 5 துணை முதல்வர்கள் நியமனம் செய்து […]