பக்கவாதத்தால் பாதிக்கபட்ட தாயை உயிருடன் புதைத்த மகன். மூன்று நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு. சீனாவில் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஜிங்பியான் நகரைச் சேர்ந்தவர் வாங் என்ற 79 வயது மூதாட்டி. இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவரது மகன் மா (58) தான் இவரை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், மா கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தனது தாயை, நாற்காலியில் அமரவைத்து வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளார். அதன்பின் மா மட்டும் தனியாக வீடு திரும்பியுள்ளார். […]