கோவை பேரூர் செட்டிபாளையத்தில் வரும் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72வது பிறந்தநாள் கொண்டாப்பட உள்ள நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதற்கான முகுர்த்தகால் நாட்டு விழாவில் நேற்று கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 22ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா 72வது பிறந்தநாளை முன்னிட்டு 72 கல்யாணம் 72 சீர்வரிசையுடன் நடைபெறுகிறது என தெரிவித்தார். மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தமிழகத்தை முதன்மை மாநிலமாக முதல்வர் கொண்டு வந்துள்ளதோடு 11 புதிய மருத்துவக்கல்லூரி பெற்று தந்து […]
கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 1000 பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டு புடவை, வளையல் உள்ளிட்ட பல்வேறு சீர்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் 50 ஆண்டு கால வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அதிமுக அரசு தந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் திமுக ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் எதுவும் செய்யாமல் தற்போது குறுக்கு வழியில் முதல்வராக நினைக்கிறார் என குற்றம்ச்சாட்டினார்.
திருவாரூரில் நடைபெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன அறிவிப்பை வெளியிட போகிறார் என்ற பதட்டத்திலே மு.க.ஸ்டாலின் இருப்பதாக விமர்சித்தார். பின்னர் திமுக கட்சி பிரசாந்த் கிஷோர் தலைமையில் இயங்குகிற கார்ப்பரேட் கட்சி என்றும், அதிமுக மக்களுக்கான கட்சி என்றும் தெரிவித்தார்.
மதுரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக ஆட்சி முடிந்துவிடும் என சிலர் எண்ணிய நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி நடைபெற்றுவருவதாக தெரிவித்தார். இதை பொறுக்க முடியாமல் திமுக உட்பட எதிர்கட்சிகள் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக விமர்ச்சித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி 1948 கர்நாடகா மாநிலத்தில் பிறந்தார். இன்று ஜெயலலிதா பிறந்த நாள் ஆகும். ஜெ.ஜெயலலிதா பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி 1948 கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம்-வேதவல்லி இணையரின் மகளாக பிறந்தார்.ஜெயலலிதாவின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி. ஜெயலலிதாவின் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். எனினும் அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க […]