மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மீண்டும் நடை திறப்பு என அறிவிப்பு. கேரளா – மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மீண்டும் நடை திறக்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜைக்காக நாளை முதல் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். டிசம்பர் 31 முதல் 2022 ஜனவரி 22 வரை பக்தர்கள் தரிசிக்கலாம் என்றும் தினமும் 60,000 பக்தர்களுக்கு அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஜனவரி 14-ஆம் தேதி […]
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள போலீஸ் தெரிவித்துள்ளது. சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கக் கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.ஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க. தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதையடுத்து சபரிமலையை சுற்றியுள்ள இடங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிந்து, […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்க்காக சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை நடைபெற இருப்பதால் அதற்கான ஆயத்த பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் டிராக்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து , மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவிலின் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. மகரவிளக்கு பூஜை காலத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி இளம் பெண்கள் யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் […]
சபரிமலையில் எந்தவித போராட்டங்களையும் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள கேரள உயர் நீதிமன்றம், சபரிமலை போராட்டத்துக்கான இடமல்ல என்று தெரிவித்துள்ளது. சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின்போது, பக்தர்களை கண்காணிக்க 2 நீதிபதிகள், ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி ஆகியோர் கொண்ட மூவர் குழுவையும் உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது. சன்னிதானத்தில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகளை நீக்க அறிவுறுத்திய […]
சபரிமலை விவகாரம் தொடர்பாக அவசரமாக கூடிய கேரள சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சன்னிதானத்தில் சரண கோஷம் எழுப்பக்கூடாது, தங்கக்கூடாது என்பன உள்ளிட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. இவற்றை ரத்து செய்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, கேரள சட்டப்பேரவை அவசரமாக கூடியது. சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரச்சினை கிளப்பியதால் அமளி ஏற்பட்டது. உறுப்பினர்கள் கைகலப்பில் […]
சாலை மறியலில் ஈடுபட்ட புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து, புதுச்சேரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதையடுத்து கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, புதுச்சேரி பாஜக அலுலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் உள்பட 100-க்கும் […]
புதுச்சேரியில் பாஜக சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தின்போது, பேருந்துகள் மீது கல்வீசி, கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்த வயது பெண்களும் அனுமதிப்பது குறித்த விவகாரத்தில், கேரள அரசை எதிர்த்து, புதுச்சேரி பாஜகவினர் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முழு அடைப்பு போராட்டம் காரணமாக, புதுவையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள், மற்ற மாநில பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த […]
சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்காக மட்டும் 2 நாட்களை ஒதுக்க தயாராக இருப்பதாக, கேரள உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை […]
சபரிமலையில் எதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்று கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், கோயிலுக்குள் பெண் பக்தர்கள் நுழைய முயலும் போது, அதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டதால், சபரிமலை கோயில் வளாகத்துக்குள் காவல்துறையினர் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த […]
சபரிமலைக்கு வழிபாடு செய்ய சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். சபரிமலை பாரம்பரியம் காக்கப்பட இளம்பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொண்டர்களுடன் இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்கு வழிபாடு செய்யச் சென்றார். அவரை நிலக்கல்லில் தடுத்து நிறுத்திய கேரள போலீஸார் தொண்டர்களுடன் பம்பைக்கு செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருடன் பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவரையும் […]
அய்யப்ப பக்தர்களை வதை முகாம்களில் உள்ளவர்களை போல் கேரள அரசு நடத்துவதை கைவிட வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். சபரிமலை விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பா.ஜ.க தலைவர் அமித்ஷா கண்டனம் தெரிவித்து டுவிட்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உணர்வு பூர்வமான சபரிமலை விவகாரத்தை கேரள அரசு கையாளும் முறை ஏமாற்றத்தை அளிப்பதாகவும், இளம்பெண்கள், தாய்மார்கள், வயதானவர்களுக்கு உணவு, தங்குமிடம், கழிப்பிடம் போன்ற எந்த வசதியும் செய்து தராமல் கேரள போலீஸார் அவர்களை […]
கேரள ஐய்யப்பன் கோவிலில் திட்டமிட்டு பிரச்சனையை உண்டாக்கும் RSS , BJP என கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியுள்ளார். கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகள் , RSS , BJP போராட்டம் நடத்தி கேரள ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வன்முறையை ஏற்படுத்தி வருகின்றனர்.சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்கு பிறகு இரண்டு முறை கோவில் நடை திறக்கப்பட்ட போதும் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மேற்கொள்கிறார்கள். இது குறித்து சபரிமலை […]
கேரளாவில் உள்ள சபரிமலையில் அய்யப்ப பக்தர்களிடம் கேரள போலீஸ் கடும் கெடுபிடிகள் செய்ததாக கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகள் , RSS , BJP போராட்டம் நடத்தி கேரள ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வன்முறையை ஏற்படுத்தினர்.இதனால் தற்போது பகதர்கள் பாதுகாப்பிற்க்காக கேரள காவல்துறை கடுமையான கெடுபிடியில் செய்து வருகிறது. பக்தர்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்ட BJP , RSS வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு, […]
கேரளா சபரிமலை கோவிலில் 15,000 போலீசார் குவிக்கப்பட்ட வேண்டியதன் அவசியம் என்ன? என்று கேரள அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வியை எழுப்பியுள்ளது. கேரளா சபரிமலையில் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அனால் கேரளாவில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி , rss , இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்தமாதம் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறந்த போது பெண்கள் வழிபட முயற்சி செய்ததால் அப்போது நடைபெற்ற போராட்டத்தால் பதற்றமான […]
போலீஸ் கெடுபிடியால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு பின்னர் இருமுறை கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை. இந்நிலையில் கோவில் மண்டல […]
சபரிமலையில் பாதுகாப்பு என்ற பெயரில் அச்சுறுத்தலான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. பெண்களை அனுமதிப்பதற்கு பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது, போராட்டமும் தொடர்கிறது. போராட்டம் தொடரும் நிலையில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக கோவில் வெள்ளியன்று திறக்கப்பட்டது. கேரளா, தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, தெலுங்கானா […]
கேரள மாநில பா.ஜ.க. பொது செயலாளர் சுரேந்திரனின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி இன்று எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்து கடந்த செப்டம்பர் மாதம் 28ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த மாதம் 17ந்தேதி ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது, கோவிலுக்கு செல்ல முயன்ற 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட […]
சபரிமலை கர்மா சமிதி என்ற அமைப்பு கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்து கடந்த செப்டம்பர் மாதம் 28–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.கடந்த மாதம் 17–ந் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது, கோவிலுக்கு செல்ல முயன்ற 10–50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அய்யப்ப பக்தர்கள் […]
ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க கால அவகாசம் கேட்டு சபரிமலை தேவஸ்தானம் மனு தாக்கல் செய்ய உள்ளது. பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், இதற்கு பெண்கள் உட்பட பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.எதிர்புகளையும் மீறி கோவிலுக்குள் நுழைய முயன்றவர்கள் மீது தாக்குதல் சம்பவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் சுழ்நிலை உருவாகியுள்ளது.இரண்டு மாத கால மண்டல பூஜைக்காக நாளை சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது. dinasuvadu.com
கொச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியேறவிடாமல் பக்தர்கள் போராட்டம் நடத்தும் நிலையில் திருப்தி தேசாய் புனே திரும்ப திட்டமிட்டுள்ளார். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் இன்று திறக்கப்பட்டது. கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதி அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும் நிலையில் பெண்ணியவாதியான திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்குள் செல்வேன் என்று அறிவித்தார். அதன்படி காலை 4:30 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் […]