சீனாவில் ஆரம்பித்திருந்தாலும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தற்பொழுது மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசின் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் உலகளவில் கொரோனா வைரஸால் 2,083,607 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 134,632 பேர் உயிரிழந்துள்ளனர். 510,666 பேர் குணமாகியுமுள்ளனர். கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் அதிகம் தாக்கப்பட்டது வளர்ந்த நாடாகிய அமெரிக்கா தான்.இதுவரை அமெரிக்காவில் 6,44,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 28,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு இறப்பு சதவிகிதம் மட்டும் […]
சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் 200 நாட்களுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் இத்தாலியில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகப்படியான பாதிப்பால் 144 தடை உத்தரவை முதன்முறையாக மேற்கத்திய நாடுகளில் அறிமுகப்படுத்தியது இத்தாலி தான். இந்நிலையில், இத்தாலியில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தாலியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், 11,500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் […]