சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 2ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோடநாடு எஸ்டேட் பங்களா சிறுதாவூர் பங்களா ஆகியவற்றை முடக்கியுள்ள வருமானவரித்துறையினர் அதற்கான நோட்டீஸ் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு 187 இடங்களில் நடைபெற்ற அதிரடி வரிமானவரிச்சோதனைக்கு பிறகு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 1800 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டன.இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் லதா,கிராம அதிகாரி சத்யா ஆகியோருடன் அங்கு வருகை […]