குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் இசுதான் காத்வி என்பவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தல் மொத்தம் 182 தொகுதிகளில் வரும் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும், 2ஆம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முதற்கட்ட தொகுதிகளுக்கு நவம்பர் 5ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 10ஆம் தேதியும் தொடங்க உள்ளது. […]